sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அம்மாவுக்கு என்னென்ன உதவிகள் செய்வீர்கள்?

/

அம்மாவுக்கு என்னென்ன உதவிகள் செய்வீர்கள்?

அம்மாவுக்கு என்னென்ன உதவிகள் செய்வீர்கள்?

அம்மாவுக்கு என்னென்ன உதவிகள் செய்வீர்கள்?


PUBLISHED ON : ஜூலை 17, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரபரப்புகள் நிறைந்தது அதிகாலை. பள்ளிக்குக் கிளம்பும் மாணவர்களைவிட, அவர்களைத் தயார்படுத்தி அனுப்புவதில் அம்மாக்களின் பங்கு பெரியது. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்து, உணவு சமைத்து பள்ளிக்கு அனுப்புவதற்குள் பெற்றோர்களுக்குத்தான் எவ்வளவு வேலைகள். எல்லாவற்றையும் பள்ளிக்குக் கிளம்புவதற்குள் செய்தாக வேண்டும். அதிகாலை அவசரத்தில், அம்மாவுக்கு நீங்கள் என்ன உதவியெல்லாம் செய்வீர்கள் என்று சென்னை, நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். போட்டிபோட்டுக்கொண்டு, நறுக்குத் தெறித்தாற்போல அவர்கள் சொன்ன கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

த.மா.சேஷசாயி - 12ம் வகுப்பு

அம்மா அட்டவணை போட்டது போல, ஒழுங்கா அவங்களோட வேலைகளைச் செய்வாங்க. அப்படியும் நான் சில உதவிகளை செய்தாலும், தேர்வுநேரம் போன்ற நேரங்களில், வீட்டு வேலைகளில் எந்த உதவியும் செய்ய முடிவதில்லை. காலை வேளைகளில் அம்மாவிற்கு உதவ, நேரம் கிடைப்பதில்லை. மாலை வேளைகளில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது போன்ற உதவிகளைச் செய்கிறேன்.

தி.ஸ்ரீராம் - 12ம் வகுப்பு

எல்லோரும் சொன்னதுபோல நேரம்தான் முக்கியமாக இருக்கிறது. படிப்பு, பயிற்சித் தேர்வுக்கு தயாராவது என மாணவர்களாகிய எங்களுக்கு இருக்கிற நேரம் முழுக்க, இவற்றைச் செய்யவே சரியாக இருக்கிறது. இதில் எங்களுக்கு ஓய்வு என்பதே குறைவுதான். காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது, அம்மாவைப்போலவே நாங்களும் பரபரப்பாகத்தான் இருக்கிறோம். அந்த நாளின் பாடங்கள், தேர்வுகள் குறித்தே, எங்கள் கவனம் இருக்கிறது. இந்த நிலையில், அம்மாவின் வேலைகளில் உதவ, நேரம் கிடைப்பதில்லை. பள்ளிக்குக் கிளம்பும்போது, அடிப்படையான விஷயங்களான சீருடை எடுத்துக்கொள்வது, காலணிகளைச் சுத்தம் செய்து அணிந்துகொள்வது, மதிய உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வது போன்ற பணிகளை நானே செய்துகொள்கிறேன். உதவி செய்கிறோம் என்ற பெயரில் அம்மாவை உபத்திரவம் செய்யாமலும் இருக்கிறோம்.

மு.பிரியதர்ஷினி - 11ம் வகுப்பு

அம்மாவே எங்களை படிக்கத்தான் சொல்றாங்க. நான் போய் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டாலும், அவர்கள் என்னைச் செய்ய விடுவதில்லை. தண்ணீர் பிடித்துக்கொடுப்பது, தம்பி, தங்கைகள் பள்ளிக்குப் புறப்பட உதவுவது போன்ற வேலைகளைச் செய்வேன். மாலையில் நிறைய உதவிகள் செய்ய முடியும். காலை நேரத்தில் சில உதவிகளை மட்டுமே செய்ய முடிகிறது.

ஆ.நிதேஷ் சாய் - 12ம் வகுப்பு

அதிகாலை என்பதே நாங்கள் படிப்பதற்கான நேரமாக இருக்கிறது. மாலையிலும், இரவிலும் வீட்டுப்பாடம், தனிப்பயிற்சி என அதற்கான நேரமே சரியாக இருக்கிறது. இந்த நிலையில் அம்மாவிற்கு உதவுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அம்மாவிற்கு உதவுவது என்றால், எங்களை பள்ளிக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கான வேலைகளை நாங்களே செய்துகொள்கிறோம். நாங்கள் சமையலில் உதவுவது என்பது இயலாத காரியம். அதனால் அவருடைய மற்ற பணிகளைக் குறைக்கும் விதத்தில், பள்ளிக்கு நானே தயாராகிவிடுவேன். மேலும், அம்மா நான் அவர்களுக்கு உதவுவதைவிட, நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதையே குறிப்பிட்டுச் சொல்லுவாங்க.

ந.ஐஸ்வர்யா - 12ம் வகுப்பு

எங்களுக்கு, நேரம் ரொம்ப குறைவாகவே இருக்கு. படிப்பு மட்டும் இல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. அம்மாவிற்கு காலையில் புறப்படும்போது, உணவு எடுத்து வைத்துக்கொள்வது, தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்வது, புத்தகங்களைச் சரிபார்த்து வைத்துக்கொள்வது போன்ற சில விஷயங்களை மட்டுமே செய்ய முடிகிறது. சின்னச்சின்ன வேலைகளைச் செய்வதால், அம்மாவுக்கும் சந்தோஷம் கிடைக்கிறது.

கு.ப்ரியவ்ரதா - 12ம் வகுப்பு

அம்மாவுக்கு உதவ வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் ஆசைதான். ஆனால், எங்களுக்குப் படிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் சின்னச்சின்ன வேலைகள்தான் செய்ய முடிகிறது. நாங்கள் உதவுகிறோம் என்றால், சில நேரங்களில் அம்மாவே, 'வேணாம் நீ படிக்கிற வேலையை மட்டும் கவனமா செய்' அப்படின்னு சொல்லிடறாங்க. படிப்பு, பயிற்சின்னு நிறைய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கறதால, சில சிறு உதவிகளை மட்டுமே நான் செய்கிறேன்.






      Dinamalar
      Follow us