தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தவளை ஆட்டம்!

தவளை ஆட்டம்!

தவளை ஆட்டம்!


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தவளை ஒன்று

தாமரை இலையில்

தித்தித் தோம் என ஆடுது

அதன்

ஆட்டம் பார்த்து

அசந்து போன

பட்டாம் பூச்சி பாடுது

பச்சைப் புல்லில்

மஞ்சள் பூக்கள்

மிச்சம் இன்றி சிரிக்குது

அங்கே

செக்கர் வானம்

சொக்கி மயங்கி

பக்கம் வரவே பார்க்குது

கண்ணைத் திறந்தால்

அன்னை இயற்கை

உன்னை ஈர்த்து மினுக்குது

அந்த

இயற்கை யால்தான்

இன்று வரைக்கும்

நமது குலமே சிறக்குது.

- ரமேச்சு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us