PUBLISHED ON : மார் 19, 2018

அ நிறம் | அளவு
ஊசிப் பனை
ஆங்கிலப் பெயர்: 'நீடில் பாம்' (Needle Palm)
தாவரவியல் பெயர்: 'ராபிடோபைலம் ஹிஸ்ட்ரிக்ஸ்' (Rhapidophyllum Hystrix)
* 'அர்காசியே' (Arecaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.
* 'ராபிடோபைலம்' (Rhapidophyllum) இனத்தில் உள்ள ஒரே பனை.
* பனை வகைகளில் மைனஸ் 20 டிகிரி வரை குளிரைத் தாங்கக்கூடியது.
* 3 மீட்டர் உயரம் வரை வளரும். சிறிய புதர் போன்று காணப்படும்.
* தண்டுப் பகுதியில் முட்களை உடையது.
* இலைகள் விசிறி வடிவில் இருக்கும்.
* நெருக்கமாக அமைந்த தண்டுகள் ஊடுருவ முடியாத புதர்க்காடுகள் போல காட்சி தரும்.
* சூரிய ஒளிக்காக நிலத்தை நோக்கித் தாழ்ந்தபடி இதன் இலைகள் அமைந்திருக்கும்.
* ஈரப்பதமுள்ள நிலத்திலேயே இது நன்கு வளரும்.
* உலகம் முழுவதும் காணப்படும்.
- கி.சாந்தா
