தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எனக்குப் பிடித்த காந்தி!

எனக்குப் பிடித்த காந்தி!

எனக்குப் பிடித்த காந்தி!


PUBLISHED ON : செப் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாள், நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வேளையில், இன்றைய பள்ளி மாணவர்களுக்குக் காந்தியைப் பிடிக்குமா? என்னும் கேள்வி எழ, மகாத்மா காந்தியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் குணம் என்ன? ஏன்? என கேட்டிருந்தோம்.

கோவை, தெலுங்குபாளையம் பிரிவு, வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 8ஆம் வகுப்பு மாணவர்களின் கருத்துகள் இதோ:

காவ்யா: எளிமையாக வாழச்சொல்வதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டினார். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் காட்டாமல் நாட்டுமக்களை ஒரே அளவுகோலின்படியே பார்த்தவர் காந்தி. அவரது இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நந்தினி: இந்துமதக் கோட்பாடுகளால் மட்டும் கவரப்பட்டவர் அல்ல காந்தி; அவர் சமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் போதனைகளாலும் செதுக்கப்பட்டவர்தான். சாதிமத பேதமற்ற காந்தி, அனைத்து மதங்களிலுள்ள தீமைகளை நிராகரிப்பது நமது கடமை என்றார். இந்தக் குணமும், கொள்கையும் என்னைக் கவர்ந்தவை.

ஷிவானிஸ்ரீ: ஆயுதபலத்துடன் இருந்த ஆங்கிலேயர்கள், காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கண்டு மிரண்டு போனார்கள். அகிம்சையின் முன்னால் பீரங்கிகள் என்ன செய்துவிடமுடியும்? இதுவே மற்ற நாடுகளில் காந்தியின் புகழ் பரவக் காரணமானது. சத்தியாக்கிரகத்தை அறிமுகப்படுத்திய காந்தியே எனக்குப் பிடித்த தலைவர்.

கீர்த்தனா: எப்போதும் உண்மையைப் பேசவேண்டும் என்று போதித்த காந்தி, அதன் வழியே நடக்கவும் செய்தார். இக்குணம் பிடித்ததால், நான் எப்போதும் உண்மையே பேசவேண்டும் என முயன்று வருகிறேன்.

லலித்குமார்: அகிம்சையைப் போதித்த காந்தி, பிறர் தனக்குத் துன்பம் செய்தாலும், அவர்களை மன்னிக்கும் குணத்துடனே வாழ்ந்தார். அவரது இந்தக் நற்குணமே என்னைக் கவர்ந்தது.

இனியாஸ்ரீ: தவறு செய்வது மனித இயல்பு என்றாலும், அது தொடராமல் கவனத்துடன் வாழ்ந்தவர் காந்தி. அவரின் இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் தவறுகள் செய்யாமல் இருக்க முயன்று வருகிறேன்.

லட்சுமிஸ்ரீ: வாழும் காலத்திலேயே உலகத் தலைவர்களால் புகழப்பட்ட காந்தியின் கடவுள் பக்தி, வியக்கத்தக்கது. அவர் கடைசிவரை மாறாத கடவுள் பக்தியுடன் வாழ்ந்தார். அதுவே எனக்கு அவரிடம் பிடித்த குணம். ஏனெனில், எனக்கும் கடவுள் பக்தி உண்டு.



காயத்ரி
: காந்தியடிகள் எப்போதுமே உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தவர். அந்த ஆளுமைத்திறமே எனக்கு மிகவும் பிடித்த குணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us