PUBLISHED ON : மார் 11, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய அளவில் மஞ்சள் உற்பத்திக்கு, பெயர் பெற்றது ஈரோடு மாவட்டம். தமிழர் வாழ்வில் சங்க காலம் முதலே சிறப்பான இடம் பெற்றுள்ளது மஞ்சள். இது சேர, சோழ மன்னர்கள் காலத்திலிருந்தே மிக முக்கியமான வணிகப் பொருளாகவும் விளங்குகிறது. சமயம் மற்றும் சமூகம் சார்ந்த விழாக்களிலும் மஞ்சள், புனிதப் பொருளாகக் கருதப்பட்டு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication - GI tag) வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 2013ஆம் ஆண்டு முதல் ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டு வந்தது. புவிசார் குறியீட்டுக்கான இந்தியப் பதிவுத்துறை, கடந்த 6ஆம் தேதி ஈரோடு மஞ்சளை அங்கீகரித்து புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

