உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மார் 11, 2019
அ நிறம் | அளவு
கிளிண்ட் மேசே (Clint Masse) என்பவருக்கு, கனடாவில் உள்ள செயின்ட் அடோல்ப்பில் சோள வயல் உள்ளது. அதில், அவர் கடந்த 21 ஆண்டுகளாக புதிர் பாதையை உருவாக்குவது வாடிக்கை. இம்முறை அதை பனியாலான புதிர்ப் பாதையாக உருவாக்க விரும்பினார். ஆறு வாரங்கள், 12 நபர்களின் உழைப்பில் 150 ட்ரக் பனியைக் கொண்டு புதிர்ப்பாதை உருவானது. இந்த உலகின் மிகப் பெரிய பனிப் புதிரை உருவாக்கியதற்காக கின்னஸ் சாதனைப் பட்டியலில் கிளிண்ட் இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது, தண்டர் பேவில் உள்ள ஃபோர்ட் வில்லியம் ஹிஸ்டாரிக்கல் பார்க்கில் உள்ள 1,696 சதுர அடி பரப்புள்ள பனிப்புதிர்தான்.
