sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பரிசுத் தாத்தா! பரிசு தா தா

/

பரிசுத் தாத்தா! பரிசு தா தா

பரிசுத் தாத்தா! பரிசு தா தா

பரிசுத் தாத்தா! பரிசு தா தா


PUBLISHED ON : டிச 26, 2016

Google News

PUBLISHED ON : டிச 26, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலு, பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போதே, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்தான் வந்தான். வந்ததும், அவசர அவசரமாக தொப்பி, தாடி மீசையை எல்லாம் நீக்கிவிட்டு, எதையோ நினைத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

“அப்படி என்ன விஷயம் பாலு; நினைத்து நினைத்து சிரிக்கிற மாதிரி?” என்று நானும், ஞாநி மாமாவும் திரும்பத் திரும்பக் கேட்டோம். “அப்பறம் சொல்றேன்” என்று மழுப்பிவிட்டான்.

“எதுக்கு நீ திடீரென்று இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டாய்?” என்று மாமா கேட்டார். “ஏதோ கின்னஸ் ரிகார்டுக்காக, அதிகம் பேரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போடவைத்தார்கள்.” என்றான் பாலு. மொத்தமாக 500 மாணவர்கள் வேடம் போட்டு வந்தார்களாம்.

“அது ரிகார்ட் இல்லியே. ஏற்கனவே திருச்சூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 18,212 பேர் சாண்டா கிளாஸ் மேக்கப் போட்டதுதான் ரிகார்ட்.” என்றது வாலு. “அது பொது ரிகார்டா இருக்கும். இது ஸ்கூல் ரிகார்டாக இருக்கலாம்” என்றார் மாமா.

“ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாதானே இருக்க முடியும். எதற்கு இத்தனை பேர்? இப்படித்தான் நிறைய குழந்தைகளுக்கு, பாரதியார் வேடம், பெரியார் வேடம் எல்லாம் போட்டு விடுகிறார்கள். ஏன் இப்படி நிறைய பேருக்கு போடவேண்டும்?” என்றேன். “அந்த மாதிரி ஒருத்தர் வாழ்ந்தால் போதாது. இன்னும் நிறையப் பேர் அப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காக இருக்கலாம்” என்றார் மாமா.

“கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஒருத்தர் இருந்தாரா என்ன?”

“அப்படி யாரும் இல்லை. நான்காம் நூற்றாண்டில் செயிண்ட் நிகோலஸ் என்று ஒரு துறவி இருந்தார். அவர் கிறிஸ்துமஸ் சமயத்தில், ஏழைக் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பார். செயிண்ட் நிகோலஸ்தான், சாண்டா கிளாசாகிவிட்டார். தவிர, பண்டிகை தினங்களில் சிறுவர்களுக்கு பரிசுகள் கொடுக்கும் வழக்கம், எல்லா மதங்களிலும் எல்லா கலாசாரங்களிலும் இருந்து வருகிறது. ஆனால் கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்துமஸுக்கு முன் இரவு ரகசியமாக வீட்டுக்கு வந்து பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுப் போவார் என்ற கதை மேற்கத்திய நாடுகளில் பலமாக வேரூன்றிவிட்டது.”என்றார் மாமா.

நிறைய குழந்தைகள் அங்கே நிஜமாகவே ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறார் என்று நம்புகிறார்களாம். அவர் வட துருவத்தில் வசிக்கிறார். அவருடன் பெரிய குட்டி தேவதை படையே இருக்கிறது. கிறிஸ்துமஸ் சமயத்தில், பரிசாகக் கொடுப்பதற்காக விதவிதமான பொம்மைகளை தயாரிப்பதுதான் இந்த தேவதைகளின் வேலை. நல்ல சமத்துக் குழந்தைகளுக்கு பொம்மை பரிசு; குறும்புக்கார விஷமக் குழந்தைகளுக்கு, பொம்மை கிடையாதாம். கரித்துண்டுதான் தருவாராம். இப்படி சொல்லி பயமுறுத்தியே, குழந்தைகளை சமர்த்தாக இருக்கப் பழக்குவார்கள் என்று நினைக்கிறேன்.

பெரிய தொப்பை, நரைத்த தாடி, சிவப்பு முடி கோட், மான்கள் இழுக்கும் வண்டி என்று கிறிஸ்துமஸ் தாத்தாவைச் சுற்றி, விதவிதமான கற்பனைகளை பின்னியிருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்றைக்கு இந்த வேடம் போட்டு நடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க, தனி பயிற்சிப் பள்ளிகள் கூட இருக்கின்றனவாம்.

“எல்லாமே இன்றைய உலகத்தில் வணிகமாக்கப்பட்டு விடுகின்றன. கிறிஸ்துமஸ் தாத்தாவை வைத்து, சிறுவர்களுக்கான வீடியோ கேம்ஸ், பொம்மைகள் தயாரித்து விற்பது இன்றைக்கு பெரிய வியாபாரம். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு, இந்த குறிப்பிட்ட பொம்மையை குழந்தைக்கு வாங்கித்தராவிட்டால், அப்பாவுக்கு அவமானம் என்கிற அளவுக்கு விளம்பரம் நடக்கும். இதை வைத்து, அந்த மாதிரி அப்பா பாத்திரத்தில், அர்னால்ட் ஷவஸ்நாகர், ஜிங்கிள் ஆல் தி வே என்று ஒரு படமே நடித்திருக்கிறார்.” என்றார் மாமா.

கிறிஸ்துமஸ் தாத்தா, வட துருவத்தில் இருக்கிறார் என்ற கற்பனையை அரசாங்கங்கள் கூடப் பயன்படுத்திக் கொள்கின்றன. அமெரிக்க அரசு, அலாஸ்கா மாநிலத்தில் ஒரு நகரத்துக்கே வட துருவம் என்று பெயர் சூட்டி, அதுதான் சாண்டா கிளாசின் சொந்த ஊர் என்கிறது. கனடா அரசாங்கம் தங்கள் பகுதியில்தான் அவர் குடியிருப்பதாகவும், பரிசுகளைக் கொடுப்பதற்காக உலகம் முழுவதும் சுற்றிவிட்டு திரும்பும்போது, ஒரு கனடா நாட்டு குடிமகன் என்ற முறையில் முன் அனுமதி எதுவும் அவருக்குத் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து எல்லா நாடுகளும்,கிறிஸ்துமஸ் தாத்தா, அவர்கள் நாட்டு பிரஜை என்று சொல்லிக் கொள்கின்றன.

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு, நாம முன்கூட்டியே கடிதம் எழுதி, எனக்கு இன்ன பரிசு வேண்டும் என்று தெரிவிக்கலாம் என்ற ஏற்பாட்டை, பல நாடுகள் செய்திருக்கின்றன. கனடாவில் இப்படி அனுப்பும் கடிதத்துக்கு தபால் தலையே ஒட்டத்தேவையில்லை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கடிதங்கள், குழந்தைகளிடமிருந்து வருகின்றனவாம். பிரான்ஸ் நாட்டுக்கு 12 லட்சம் கடிதங்கள் வந்துள்ளன.

“கடிதத்தில் கேட்டபடி, பரிசை அனுப்ப முடியுமா என்ன?” என்று மாமாவைக் கேட்டேன். “ஏழைக் குழந்தைகளிடமிருந்து வந்த கடிதம் என்று தெரிந்தால், அதை தொண்டு நிறுவனங்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் ஏதாவது பரிசு அனுப்புவார்கள். மற்றபடி எல்லா கடிதங்களுக்கும் சாண்டாவின் பதில் கடிதம் மட்டும் அனுப்புகிறார்கள்.!” என்றார் மாமா.

“இப்படியெல்லாம் நிஜம் போல காட்டினால், குழந்தைகள் மெய்யாகவே கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஒருத்தர் இருக்கிறார் என்று நம்ப ஆரம்பித்துவிட மாட்டார்களா? இல்லை என்று தெரிந்தால், ஏமாற்றமாக இருக்காதா?”

“அதைப் பற்றியும் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஆறேழு வயதாகும்போது, இதெல்லாம் கற்பனை என்று தெரிந்ததும், அவர்கள் ஏமாற்றம் அடைவதும் இல்லை. பெற்றோரிடம் கோபப்படுவதும் இல்லை. தங்களைவிட சின்னக் குழதைகளுக்கு, இது இன்னும் தெரியாமல் இருக்கிறது; தங்களுக்குத் தெரிந்துவிட்டது என்று சந்தோஷப்படுகிறார்களாம். தவிர, மேற்கத்திய நாடுகள், ஆண் பொம்மை என்றாலே, துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடுகிறவனாகவே ஆக்கிவைத்திருக்கிறது. அதில் கிறிஸ்துமஸ் தாத்தாதான் துப்பாக்கி இல்லாமல் அன்பான ஆணாக குழந்தைகள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.” என்றார் மாமா.

“இன்னிக்கு எங்க பள்ளிக்கு வந்த பெரிய கிறிஸ்துமஸ் தாத்தாகூட அன்பாகத்தான் இருந்தார். ஆனால், பாவம் அவர்…” என்று சொல்லிவிட்டு, பாலு பழையபடி சிரிக்க ஆரம்பித்தான்.

“டேய் என்னவென்று சொல்லிவிட்டு சிரி” என்று அதட்டினேன்.

“நான் அவர் பக்கத்தில் இருந்தேன். முதல் குழந்தைக்கு பரிசு கொடுக்க கையில் எடுத்ததும் அவர் படு சத்தமாக ஒரு குசு விட்டார். எல்லாரும் சிரித்து விட்டோம். அவருக்குக் கஷ்டமாகிவிட்டது. சட்டென்று சமாளித்துக் கொண்டு அவரும் சிரித்துவிட்டார்.” என்றான் பாலு.

“ஸில்லி பாலு. இதுக்கா அப்படி சிரிச்சே?”

“ஸில்லி இல்லை மாலு. குசு ஒன்றும் இழிவான விஷயம் இல்லை. அது நம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து குணமாகும்போது, மருத்துவர்களே கேட்பார்கள். காற்று பிரிந்ததா என்று. அப்போதுதான் உடல் சகஜநிலைக்கு வந்ததாக அர்த்தம். இந்த மாதிரி கிறிஸ்துமஸ் தாத்தா, கிருஷ்ணன், பாரதியார் என்றெல்லாம் வேடம் போட்டு நடிக்கப் போவதற்கு முன்னால் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்று உணவில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நடிப்பு, தேர்வு எதற்குப் போவதற்கும் முன்னால் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவர் இன்றைக்கு ஒரு நல்ல பாடம் கற்க உதவியிருக்கிறார். அதுவும் ஒரு பரிசுதான்.” என்றார் மாமா.

“சரி மாமா. ஏன் சாண்டா பரிசுகளை குழந்தைகளுக்கு மட்டும் தருகிறார்? பெரியவர்களுக்கு பரிசு கிடையாதா?” என்றான் பாலு.

“பெரியவர்களுக்கு ஏற்கனவே பரிசு கொடுத்தாகிவிட்டது. அதனால்தான்.” என்றார் மாமா. “என்ன பரிசு ?”

“குழந்தைகள்தான் !”

வாலுபீடியா 1: கிறிஸ்துமஸ் தாத்தா சாப்பிடுவதற்காக, பிஸ்கட்டையும் பாலையும் கிறிஸ்துமஸ் மரத்தில் குழந்தைகள் வைப்பது வழக்கம். அதை சாப்பிட்டுவிட்டு, அவர் பரிசுகளை வைப்பார் என்பது எதிர்பார்ப்பு. இரண்டையும் பெற்றோர்களே செய்துவிடுவார்கள்!

வாலுபீடியா 2: அமெரிக்க விஞ்ஞானியும் சட்ட மேதையுமான பெஞ்சமின் பிராங்க்ளின், குசுவைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சியை செய்யும்படி கோரி, 1781ல் பிரஸ்ஸல்ஸ் ராயல் அகாடமிக்கு கடிதம் எழுதியுள்ளார். காற்று பிரிதலை பற்றிய ஆய்வுத்துறைக்கு, ஃபிளாட்டாலஜி (flatology) என்று பெயர்.






      Dinamalar
      Follow us