உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 25, 2018

அ நிறம் | அளவு
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரிஷா. 4ஆம் வகுப்பு படிக்கிறார். யோகாசனம் பயிற்சி செய்யும் இவர், இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று 100க்கும் அதிகமான பதங்கங்களை வென்றுள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சிறுமி பிரிஷா, நெல்லை, அரசு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தின் நீருக்குள் இருந்தபடியே எட்டுவிதமான ஆசனங்களைச் செய்து சாதனை புரிந்துள்ளார். இவரது இச்சாதனையை 'வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்' என்ற அமைப்பு கண்காணித்தது. இவரது சாதனையைப் பாராட்டி, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிசு வழங்கினார்.
