உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 19, 2016

அ நிறம் | அளவு
பிரேஸில் தலைநகர் ரியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் உயரம் தாண்டுதல் 'டி - 42' பிரிவில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அபாரமாகச் செயல்பட்ட தமிழக வீரர் மாரியப்பன் 1.89 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே அமெரிக்காவின் சாம், வருண் சிங் பெற்றார்கள். இதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய உயரம் தாண்டுதல் நட்சத்திரம் என்ற சாதனையை மாரியப்பன் படைத்தார்.
