தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கணிதம் உருவாக்கிய கூகுள்

கணிதம் உருவாக்கிய கூகுள்

கணிதம் உருவாக்கிய கூகுள்


PUBLISHED ON : அக் 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

'World Wide Web' (வேர்ல்டு வைட் வெப்) எனப்படும் இணையத்தில், கோடிக் கணக்கில் கோப்புகள் இருக்கும். 'அவற்றில் இருந்து, கூகுள் (Google) மாதிரியான தேடல் பொறி இயந்திரங்கள் (Search Engine - சர்ச் என்ஜின்) ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படி நொடிப்பொழுதில் தேடித் தருகின்றன?' என்று வியந்து போவோம்.

1998ஆம் ஆண்டில், லாரன்ஸ் பேஜ் (lawrence Page) (லேரி - Larry), செர்ஜி பிரின் (Sergey Brin) என்ற அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வியல் மாணவர்கள், 'பேஜ்ரேங்க் அல்காரிதம்' (Page rank algorithm) எனும் படிமுறையை (Algorithm) உருவாக்கினார்கள். இணையத்தை அலசி ஆராய்ந்து, நாம் தேடும் தகவலை நொடிப்பொழுதில் தருவதற்காக ஒரு படிமுறையை ஏற்படுத்த முயன்றார்கள். அப்படி உருவானதுதான் இந்த அல்காரிதம். இதை அடிப்படையாகக் கொண்டே, இருவரும் கூகுள் தேடல் பொறியை வடிவமைத்து, கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இந்த பேஜ்ரேங்க் அல்காரிதம், நிகழ்தகவு (Probability - ப்ராபபிலிட்டி), கோல இயல் (Graph Theory-கிராஃப் தியரி), அல்ஜீப்ரா (Algebra) போன்ற கணித உட்பிரிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட இணைய தளத்துக்கான இணைப்பு (Link - லிங்க்), வெவ்வேறு இணையதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். அந்த இணைய தளம், எத்தனை இணைய தளங்களில் லிங்க் ஆகி இருக்கிறது என்று கண்டறிந்தால், ஒரு தளம் எவ்வளவு புகழ்பெற்றுள்ளது என்பதைக் கண்டறிய முடியும் அல்லவா? இந்த சிந்தனைதான் கூகுள் பேஜ்ரேங்க் படிமுறையை உருவாக்கிய அடிப்படை சிந்தனை. பிற்காலத்தில் அவ்வாறு பிரபலமாக இருக்கும் இணையதளம் தரமானதாகவும் உள்ளதா என்பதை நிர்ணயித்துக் கொடுக்கும் விதத்தில் பேஜ்ரேங்க் அல்காரிதம் மெருகேற்றப்பட்டது.

இவர்கள் வழங்கிய படிமுறையைப் பயன்படுத்தி, ஒரு நிறுவனத்தின் இணையதளம் எவ்வளவு பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது என்றும், எவ்வளவு நபர்கள் அதைப் பார்த்து, பயன் அடைகிறார்கள் என்றும் தெரிந்துகொள்ள முடியும். இந்த முறையில், 0 முதல் 10 புள்ளிகள் வரையில், குறிப்பிட்ட ஓர் இணையதள முகவரி மதிப்பிடப்படும். மதிப்பீடு அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் அதிக பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது தெரிய வரும். நாம் தேடும் ஒரு தகவல், அதிக பேஜ்ரேங்க் பெற்ற இணையதளத்தில் இருந்தால், தேடல் பொறி, அந்தத் தளத்தை பட்டியலின் முதல் சில இடங்களில் காட்டும்.

ஒரு இணையதளம் வாங்கிய

பேஜ்ரேங்க் எவ்வளவு என்பதை http://www.prchecker.info/check_page_rank.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையதள முகவரியை இதில் பதிவு செய்தால், அந்த நிறுவனம் பத்து புள்ளிகளுக்கு எத்தனை புள்ளிகள் பெற்றுள்ளது என்பது உடனடியாகத் தெரிந்துவிடும்.

கூகுள், யாஹூ (Yahoo) போன்ற இணையதளங்கள் அதிகபட்சமாக 9 பேஜ்ரேங்க் புள்ளிகள் வரை பெற்றுள்ளன. அமெரிக்க கணித சங்கம் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. உங்களது விருப்ப நாளிதழ் தினமலர்,

5 பேஜ்ரேங்க் புள்ளிகள் பெற்றுள்ளது. பொதுவாக

5 அல்லது அதற்கு மேல் பேஜ்ரேங்க் புள்ளி மதிப்புகள் பெற்ற தளங்கள், மக்கள் வரவேற்பை அதிகளவில் பெற்றுள்ளதை இந்த பேஜ்ரேங்க் புள்ளி மதிப்புகள்

உறுதி செய்கின்றன.

தேடல் பொறிகள் நமக்கு மின்னல் வேகத்தில் தரவுகளைத் தந்து உதவ, கணித அடிப்படைகளே காரணமாக இருக்கின்றன. கணித நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வதுதான், லேரி பேஜ், செர்ஜி பிரின் செய்தது மாதிரியான சாதனைகளுக்கு அடிப்படை.

இரா. சிவராமன், நிறுவனர், பை கணித மன்றம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us