PUBLISHED ON : மார் 05, 2018

அ நிறம் | அளவு
சகல வசதிகளுடன் மூவாயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள் நிறுவனம். 'ஆண்ட்ராய்டு ஓரியோ' எனப் பெயரிடப்பட்டுள்ள மொபைலில் உள்ள செயலிகள் (APPS) எல்லாமே 50 சதவீதம் அளவுக்குச் சிறியவை என்பதால், மொபைலின் செயல்வேகமும் சிறப்பாக இருக்கும் என்கிறது கூகுள்.
2018ஆம் ஆண்டுக்கான உலக அலைபேசி மாநாட்டை (2018 Mobile World Congress) ஒட்டி, இந்த போன் பற்றிய அறிவிப்பை, இந்த மாத இறுதியில் கூகுள் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ், நோக்கியா, ஜியோமி போன்ற நிறுவனங்கள், ஆண்டிராய்டு ஓரியோ போன்களைத் தயாரித்து வெளியிட இருக்கின்றன.
2017ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை சரிந்துள்ள நிலையில், கூகுளின் ஓரியோ செய்தி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
