sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சமையலில் அசத்தும் பாட்டிகள்

சமையலில் அசத்தும் பாட்டிகள்

சமையலில் அசத்தும் பாட்டிகள்


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் பாட்டிகளால் மட்டுமே சமைத்து பரிமாறப்படும் உணவகம், பலரையும் கவர்ந்து வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், 'எனோடெக்கா மரியா' உணவகம் உள்ளது. இங்கு, சமையல்காரர்கள், நிர்வாகிகள், உணவு பரிமாறுபவர்கள் என அனைவரும் பாட்டிகள்தான். இத்தாலி, போலந்து, சிரியா, பாலஸ்தீன், நைஜீரியா என உலக நாடுகளைச் சேர்ந்த 30 பாட்டிகள் இங்கு வேலை செய்து வருகின்றனர். பாட்டிகள் என்றாலே ஆரோக்கியமாகவும், ருசியாகவும் சமைப்பார்கள் என்ற பொதுக்கருத்து நிலவுவதால், இந்த பாட்டி உணவகம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

'முதியவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படாத ஒரு காலத்தில், எங்களுடைய முக்கியத்துவத்தை உணர, இந்த உணவகம் வாய்ப்பளித்துள்ளது. சம்பாதிக்க முடிகிறது என்பதை தாண்டி, எங்களுக்கான அங்கீகாரம் மகிழ்ச்சியை தருகிறது' என்கின்றனர்கள் இங்குள்ள பாட்டிகள்.

'எனோடெக்கா மரியா' இத்தாலிய உணவகமாக இருந்தாலும் பாட்டிகள் தத்தமது நாட்டு ஸ்பெஷல் உணவை சமைத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு குறை... இந்தியாவைச் சேர்ந்த ஒரு பாட்டி கூட அங்கு இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us