PUBLISHED ON : அக் 19, 2016

அ நிறம் | அளவு
தமிழக அரசு நடத்தும், 'இ-சேவை' மையத்தில் மனு அளிப்போருக்கு, அவர்களது மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
தமிழம் முழுவதும், சுமார் 10 ஆயிரம் இ - சேவை மையங்கள் உள்ளன. இங்கு, பிறப்பிட, இருப்பிட, ஜாதி, வருமான சான்றிதழ்கள் தருவது போன்ற 100க்கும் அதிகமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
மனுதாரர்கள், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா; ஒப்புதல் கிடைத்ததா என்பதை அறிய, சேவை மையங்களுக்கு மீண்டும் நேரில் செல்ல வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை தவிர்க்க, விண்ணப்பதாரர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, மனு குறித்த நிலைத் தகவல்கள் விண்ணப்பதார்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.
