தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விருந்தினர்களை வரவேற் கும் மீன்!

விருந்தினர்களை வரவேற் கும் மீன்!

விருந்தினர்களை வரவேற் கும் மீன்!


PUBLISHED ON : ஜூன் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

விநோதச் செல்லப் பிராணிகள் வரிசையில் மீன்களுக்கு முக்கிய இடமுண்டு. தற்போது சென்னையில் ஏராளமான மீன் விற்பனைக் கடைகள் வந்துவிட்டன. நூறு ரூபாய் முதல் லட்சம்

ரூபாய் வரையிலான விலையில் மீன்கள் கிடைக்கின்றன. சென்னைவாசியான அஸ்வின், 'சிறுவயதிலிருந்தே மீன்களால் ஈர்க்கப்பட்டேன், இவற்றை வளர்ப்பதே என் வேலையாக மாறிவிட்டது' என்கிறார்.

அவரிடம் மீன்கள், அதன் பராமரிப்பு குறித்துப் பேசினோம்.

மீன்களை வளர்க்க எப்படி ஆசை வந்தது?

நம்மால் உயிர்வாழ முடியாத சூழலில்கூட, உயிர் வாழும் உயிரினங்கள் மீன்கள். இதனால், மீன்கள் வளர்ப்பு மீது எனக்கு ஆசை வந்தது.

நீங்கள் மீன் வளர்க்கத் தொடங்கியது எப்போது?

ஏழாவது படிக்கும் போது, என் அம்மா 'கப் பீஸ் மீன்'களை வாங்கிட்டு வந்தார் . ஒரே வாரத்தில், மீன் குஞ்சுகள் பெருகி தொட்டியில் நிரம்பின. கண்முன்னே மீன் குஞ்சுகள் வளர்ந்து வருவதைப் பார்த்தபோது, ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆர்வத்தில் ஏராளமாக மீன்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். பத்தாவது வருவதற்குள், 32 மீன் தொட்டிகளும், சிறிய

திறந்தவெளி குளங்களையும் ஏற்படுத்திவிட்டேன்.

மீன்கள் செல்லப் பிராணிகளா?

செல்லப் பிராணிகளுக்கும் மேலே, ஒருவித உறவினர் போலவே ஆகிவிடும். சில வகை மீன்கள் வீட்டுக்காரர்கள் அருகில் வந்தாலோ, பசித்தாலோ தொட்டியில் இருந்து எட்டிப் பார்க்கும். அது சொல்லும் உணர்வு, மீன் வளர்ப்பவர்களுக்குப் புரிஞ்சுடும். பெரும்பாலான நேரத்தில் தண்ணீரில் நீந்துற மீன்கள், நம்மை வரவேற்பது போல், கண்ணாடி முன்னே வந்து நிற்பது தனி அழகு.

மீன்களை வளர்ப்பதில் நீங்கள் செய்த புதுமை என்ன?

மீன்களை வெறும் தொட்டிக்குள் மட்டுமே வளர்க்க நினைக்கல. தொட்டிக்குள் நிறைய செடிகள், கற்களை வைத்து இயற்கையான நீர்நிலை போலவே மாத்தினேன். இன்னைக்கு இதுபோல டிசைனை பலரும் செஞ்சிட்டு வர்றாங்க.

இதனால், என்ன மாதிரியான மாற்றத்தை உணர்ந்தீர்கள் ?

அறிவியலை நேரடியாக பார்த்துத் தெரிஞ்சிக்க முடியும். செடியிலிருந்து ஆக்சிஜன் எப்படி மீன்களுக்குள் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதை நேரடியாகப் பார்த்தேன். அதனுடைய

வாழ்விடத்தை அமைச்சுத் தரும் போது, மீன்கள் ரொம்ப உற்சாகத்தோடும் நீந்திச்சு. கூடவே அதோட ஆயுளும் கூடுது.

மீன்களைப் பராமரிப்பது கஷ்டமாக இல்லையா?

பிடிச்ச விஷயத்தைச் செய்யும் போது, கஷ்டம் தெரியாது. தண்ணீரை மாத்தறது, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தொட்டியை ச் சுத்தம் செய்யறதுன்னு பழகிடுச்சு. ஆனால், இப்போது

பல நவீன தொழில்நுட்பங்கள் இருக்கு. பெரிய வேலைப்பளு இல்ல. நம்மோட வேலை, மீன்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்குதாங்கிறதைக் கவனிக்கிறதுதான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us