உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 16, 2017

அ நிறம் | அளவு
திருநாள் வந்தால் கொண்டாட்டம்
தீபாவளியால் சந்தோசம்
ஒருநாள் ஆண்டில் வருகிறதாம்
ஊரே மகிழ்ந்து திளைக்கிறதாம்
புத்தாடைகள் அணிவதற்கும்
பொங்கும் மகிழ்வைப் பகிர்வதற்கும்
பட்டாசுகளை வெடிப்பதற்கும்
பண்டிகை நாளும் வருகிறதாம்.
வானில் ஒளிரும் வாணங்கள்
மண்ணில் பொறியும் மத்தாப்பு
தானாய்ச் சுழலும் சக்கரங்கள்
தட்தட்டென்னும் வெடிவகைகள்
பலகாரங்கள் சுடுகின்றோம்
பலர்க்கும் கொடுத்து மகிழ்கின்றோம்
நல்வாழ்த்துகளைப் பகிர்கின்றோம்
நாளும் மலர்ந்து சிரிக்கின்றோம்
தீபம் ஒளிரும்; நல்லொளியால்
தீமை எரிந்து அகன்றுவிடும்;
யாவும் நலமாய் மாறிவிடும்;
எங்கும் மகிழ்ச்சி தங்கிவிடும்.
- மகுடேசுவரன்
