PUBLISHED ON : ஜன 15, 2018

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் முதல் தளத்தில் ஒரு வீட்டினுள் ராட்சத விஷ சிலந்தி ஒன்று புகுந்துவிட்டது. அதனை விரட்டி அடிக்கும் முயற்சியாக அந்த வீட்டில் இருந்தவர், தீப்பந்தம் ஒன்றைக் கொளுத்தி சிலந்தியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால், அவரால் சிலந்தியை விரட்டியடிக்க முடியவில்லை. போக்குக் காட்டிய சிலந்தியைத் தொடர்ந்து தீப்பந்தம் கொண்டு கொளுத்தவும் முயற்சித்துள்ளார். சிலந்தி அகப்படவில்லை. 20 நிமிடப் போராட்டத்தில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து நெருப்பை அணைத்து, வீட்டில் இருந்தவரை பத்திரமாக மீட்டனர். இவ்விபத்தில் 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

