தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பவழக்கால் உள்ளான்

பவழக்கால் உள்ளான்

பவழக்கால் உள்ளான்


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பவழக்கால் உள்ளான்' இது எதைக் குறிப்பிடுகிறது? இது ஒரு பறவை. இதன் கால்கள் பவழ நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் stilt. இதன் இன்னொரு பெயர் பைட் ஸ்டில்ட் (pied stilt- வண்ண பொய்க்கால்). இதன் கால்கள் நீண்டும் மெல்லியதாக இருக்கும். இரு குச்சிகளை நட்டுவைத்தது போல் தோற்றம். அதன் மீது ஒரு சிறிய உருவம். கழுத்திலிருந்து வயிறு தொடங்கி வால் வரை வெள்ளையாகவும் முகுதுப் பகுதி கறுப்பாகவும் இருக்கும். இதிலேயே இன்னொரு வகை காக்கி (kaki). இதற்கு கால்கள் சிவப்பாக இருந்தாலும் உடல் முழுவதும் கறுப்பு நிறமாக இருக்கும்.

ஆண், பெண் இரு பறவைகளும் கூடு கட்ட இடத்தை தேர்வு செய்யும். குச்சிகளை ஒன்றாக சேகரிக்கும். ஆண், பெண் இரண்டுமே அடைகாக்கும். பெண் பறவை, ஒரு தடவைக்கு ஒன்றிலிருந்து ஐந்து முட்டைவரை இடும். இருபத்தைந்து நாட்கள் அடைகாத்த பிறகு குஞ்சு பொரியும். வெளிவந்த இரண்டு மணி நேரத்திற்குள் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறிவிடும்.

நதி, ஓடை, குளம், சதுப்பு நிலப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு அருகில் இவை வசிக்கும். நீரில் உள்ள மீன், மெல்லுடலிகள் மற்றும் பல்வேறு நீர்வாழ் பூச்சிகள், லார்வாக்கள் ஆகியவற்றைச் சாப்பிட்டு வாழும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us