sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கொசுக்களை விரட்டும் மூலிகை

/

கொசுக்களை விரட்டும் மூலிகை

கொசுக்களை விரட்டும் மூலிகை

கொசுக்களை விரட்டும் மூலிகை


PUBLISHED ON : நவ 28, 2016

Google News

PUBLISHED ON : நவ 28, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொச்சி

ஆங்கிலப் பெயர்: 'ஃபைவ் லீவ்டு சேஸ்ட் ட்ரீ' (Five Leaved Chaste Tree)

தாவரவியல் பெயர்: வைடக்ஸ் நெகுண்டோ' (Vitex Negundo)

வேறு பெயர்கள்: நிர்கண்டி (Nirgundi), செபாலி (Sephali), சம்பாலு (Samphalu)

இது 'வேர்பினாசியே' (Verbenaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். வேலி ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் புதராக வளர்ந்திருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மண் வளம் குறைவாக உள்ள நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், சிறிய மரம்போல காணப்படும். நான்கு புறமும் தண்டு நீண்டு இருக்கும். தண்டின் மேல்பக்கம் பச்சையாகவும், கீழ்ப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும். பூக்கள், நீலநிறத்தில் இருக்கும். மூலிகையாகவும், வயல்களுக்குத் தழை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. வயல்வெளிகளுக்கு வேலியாக வளர்க்கப்படுகிறது. கால்நடைகளிடமிருந்து இது பயிரைக் காக்கிறது.

நொச்சி இலையின் மணம் காரணமாக, சில பூச்சிகள் இதை நெருங்குவதில்லை. தானியப் பாதுகாப்பில், இதன் இலை பயன்படுகிறது. இதன் பிரம்புகளை வெட்டி, சேர்த்துக் கட்டி வீடுகளுக்கு வேலி அமைப்பர். ஆயுர்வேதம், இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை வளர்ப்பதன் மூலம், நோய்களைப் பரப்பும், கொசு, பூச்சிகளைத் தடுக்க முடியும். இந்தச் செடியை விதை போட்டும் வளர்க்கலாம். பதியம் வைத்தும் வளர்க்கலாம். இவற்றை வீட்டில் வளர்ப்பது மிக எளிதானது. உலக அளவில் நொச்சிச் செடிக்கு, 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும், 14 சிற்றினங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் நீர் நொச்சி, கருநொச்சி வகை அதிகமாகக் காணப்படுகிறது.

பயன்தரும் பாகங்கள்: இலை, கொழுந்து, பூ, வேர்ப்பட்டை

வளரும் தன்மை: தோட்டங்கள், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வயல்வெளிகள், வேலி ஓரங்களில் செழித்து வளரும்.

நொச்சி வகைகள்

கருநொச்சி: நீர்நிலை அருகில் புதர்போல அதிகம் வளரும். இது 3 மீட்டர் உயரம் வரை வளரும்.

வெண் நொச்சி: சுமார் 30 அடி உயரம் வரை, மரம் போல வளரக்கூடிய தன்மை உடையது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் கிளைகள் ஒல்லியாக இருந்தாலும், வலிமையானவை.

நீர் நொச்சி: நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில், செழித்து வளரும். இதன் இளம் கிளைகளைக் கொண்டு கூடை பின்னுவார்கள். இந்தக் கூடையில் வைக்கப்படும் பொருட்களை, பூச்சிகள் நெருங்காது.

- பழ.கோபி

'ஜீன் பாப்டிஸ்ட் ஃபாரினர்' (Jean Baptiste Fauriner) என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி, பசுமை இல்ல விளைவை, முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர், வளிமண்டலத்தின் நிகழ்வு மற்றும் பசுமை இல்ல நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார்.






      Dinamalar
      Follow us