
பூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர் வீச்சு, வளிமண்டலத்தில் இருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் வெளிப்படுவதே பசுமை இல்ல விளைவு (Green House Effect - கிரீன் ஹவுஸ் எஃபக்ட்). பூமி வெப்பமயமாதல் நடவடிக்கையில், பசுமை இல்ல விளைவும் ஒன்று.
வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள், பூமியைச் சுற்றி போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. இவை, 'பசுமை இல்ல வாயுக்கள்' (Green House Gases -- கிரீன் ஹவுஸ் கேஸஸ்) என்று அழைக்கப்படுகின்றன. நீராவியுடன் சேர்ந்து வளிமண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இவை உள்ளன. இவை, வளிமண்டலத்தில் பிரதிபலிக்கும் ஆற்றலில் இருந்து, சிறிதளவைக் கிரகித்துக் கொள்கின்றன.
நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு, வாகனப்புகை போன்றவை, அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன், வளிமண்டலத்தில் கலக்கிறது. மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை, இது அதிகரிக்க வைக்கிறது. இந்தச் செயல்களால், க்ளோரோஃபுளூரோ கார்பன் (Chlorofluorocarbon - CFC) அதிக அளவில் வெளியேறுகிறது. இதனால், அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இந்த விளைவு பொதுவாக, 'உலகம் வெப்பமயமாதல்' அல்லது, 'வெப்பநிலை மாற்றம்' என்று குறிப்பிடப்படுகிறது.
- ப.கோபாலகிருஷ்ணன்

