sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சிறகு விரிக்கும் சிறிய பறவை

/

சிறகு விரிக்கும் சிறிய பறவை

சிறகு விரிக்கும் சிறிய பறவை

சிறகு விரிக்கும் சிறிய பறவை


PUBLISHED ON : நவ 28, 2016

Google News

PUBLISHED ON : நவ 28, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதிர்க்குருவி

உயிரியல் பெயர்: 'பிரினியா இனோர்நட்டா' (Prinia Inornata)

சிறு பூச்சிகளை உண்டு வாழும் பறவை. உருண்டையான வடிவமும், நீண்ட வால்களும் உடையது. வால் பகுதி மேல் நோக்கி உயர்ந்து இருக்கும். இளஞ்சிவப்பு நிற உடலும், சாம்பல் நிற வயிற்றுப் பகுதியும் உடையது. 14 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் போன்றவற்றைக் கொண்டு, எளிதில் இனம் காணலாம்.

இது, இரு வகையாக ஒலி எழுப்பக்கூடியது. வேகமாகப் பறக்கும்போது, இதன் இறக்கைகள் 'ட்ரப்… ட்ரப்' என்ற ஒலியை எழுப்பும். இரைதேடும் நேரங்களில், எழுப்பும் 'ட்லீட்… ட்லீட்' என்ற ஒலி, மிகத் துல்லியமாக வெகு தொலைவு வரை கேட்கும்.

நிலங்களை ஒட்டிய சிறு மரக்கிளைகளில் கூடு அமைக்கும். உயரமாகவும், நெருக்கமாகவும் வளர்ந்திருக்கும் கோரைப் புற்களுக்கு இடையிலும் கூடுகள் அமைப்பதுண்டு. நீர் நிலைகளின் அருகில் அதிகம் காணப்படும். பஞ்சு, காய்ந்த கோரைப்புற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கூடுகளை அமைக்கும். மிகவும் மறைவாக, நீர் மட்டம் உயர்ந்தாலும், கூடு நனையாதபடி வடிவமைக்கும். ஒரே இடத்தில் தங்கி இனவிருத்தி செய்யும். இனவிருத்தி காலங்களில், உடலின் மேல்பகுதி சாம்பல் நிறத்தில் காணப்படும். இது 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். குஞ்சுகளுக்கு, சிறு பூச்சிகளைக் கொண்டு வந்து உணவாக அளிக்கும்.

உலர்ந்த பரந்த மேய்ச்சல் நிலங்களிலும், திறந்த கானகங்களிலும், குறுங்காடுகளிலும், நகர்ப்புற தோட்டங்களிலும் இவற்றை அதிகம் காணலாம். 1,600 மீட்டர் உயரம் உள்ள மலைப்பிரதேசங்களிலும் இவை காணப்படுகின்றன. குளக்கரைகள், புல்வெளிகள், நதிக்கரைகள், வயல்வெளிகள், காடுகள் என்று எங்கெல்லாம் பூச்சிகள் உள்ளனவோ, அங்கெல்லாம் பல்கிப் பெருகும். தாவரங்களைச் சேதப்படுத்தும் சிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, இவை உணவுச் சங்கிலியில் சூழலுக்கு உதவி புரிகின்றன.

கதிர்க்குருவி வகைகள்

செம்பட்டைக்கால் கதிர்க்குருவி (Tawny-flanked Prinia -- டாவ்னி ஃபிளாங்க்டு பிரினியா): கால்கள் செம்பட்டை நிறத்தில் இருக்கும். சஹாரா பாலைவனத்தின் தெற்கு பகுதியில் மட்டும் காணப்படும், தனி இனம்.

சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia -- ஆஷி பிரினியா): உடல் சாம்பல் நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இவை இந்தியா, நேபாளம், வங்காள தேசம், பூட்டான், இலங்கை, மேற்கு பர்மா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

- சாந்தா கிரிதரன்






      Dinamalar
      Follow us