உள்ளடக்கத்திற்கு செல்ல

உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உயர் நீதிமன்றம் உத்தரவு
உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உயர் நீதிமன்றம் உத்தரவு
PUBLISHED ON : ஆக 27, 2018

அ நிறம் | அளவு
தமிழக அரசின் 1997ஆம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ,
'மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், படிப்பில் கவனம் செலுத்த முடியும். 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு, உடற்கல்வி, யோகா போன்றவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்பதை ஏற்க முடியாது. 50 மாணவர்களுக்கு மேல் படிக்கும், அனைத்துப் பள்ளிகளிலும் கௌரவ ஊதிய அடிப்படையிலாவது உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.' என உத்தரவிட்டுள்ளது.
