PUBLISHED ON : செப் 25, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் அதிவேக புல்லட் ரயிலை, சீன ரயில்வேத்துறை கடந்தவாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து அந்நாட்டின் வணிகத் தலைநகரான ஷாங்காய் நகருக்கு இடையேயான 1,250 கி.மீ. தூரத்தை, 4 மணிநேரத்தில் இந்த புல்லட் ரயில் கடந்து சென்றது. உலகில் ஓடிக்கொண்டிருக்கும் புல்லட் ரயில்களிலேயே மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில் இது ஒன்றுதான். இதற்கு ஃபுக்ஸிங் புல்லட் ட்ரெய்ன் (fuxing bullet train) எனப் பெயரிட்டுள்ளனர். இது செல்லும்போது, வழியில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டு தானாகவே நின்றுவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

