உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 07, 2018

அ நிறம் | அளவு
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஏபிபி நிறுவனம், மின்சார காருக்கான, அதிவேக சார்ஜரை உருவாக்கியுள்ளது. இது, 200 கி.மீ., ஓடுவதற்குத் தேவையான மின்சக்தியை, எட்டே நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடுகிறது. இந்த சார்ஜரை நெடுஞ்சாலையில் உள்ள ஓய்வு நிறுத்துமிடங்கள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இதுதொடர்பாக ஏபிபி நிறுவனத்தார், 'மின்சார கார்களில், சார்ஜ் ஏற்றுவதுதான் பிரச்னை. பெட்ரோல் கார்களில் நிமிடங்களில் எரிபொருள் நிரப்பிவிட்டு நீண்ட தூரங்களுக்குப் போகலாம். ஆனால், மின்சார கார்களுக்குப் பல மணி நேரங்கள் ஆகும். அதுவும், நீண்ட தூரம் போக, இடையிடையே சார்ஜ் செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நாங்கள் உருவாக்கிய சார்ஜர் இந்நிலையை மாற்றக்கூடியது.' என்று தெரிவித்துள்ளனர்.
