PUBLISHED ON : ஏப் 10, 2023
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று வழக்கத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்களும், அதற்கு முன்னர் வழங்கப்பட்ட பெயர்களும் இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த ஊருக்கு எந்தப் பெயர் என்று கண்டறிந்து பொருத்தவும்.
01. திருச்செங்கோடு - A. கொடுங்குன்றம்
02. சீர்காழி - B. திருக்கடிகை
03. திருவையாறு - C. பிரம்பில்
04. சிதம்பரம் - D. திருமால் இருஞ்சோலை
05. சோளிங்கர் - E. அண்ணல் வாயில்
06. திருவள்ளூர் - F. திருவே(ஏ)ரகம்
07. திருச்செந்தூர் - G. கொடிமாடச்செங்குன்றூர்
08. பிரான்மலை - H. தோணிபுரம்
09. சுவாமிமலை - I. திரு எவ்வுளூர்
10. சித்தன்ன வாசல் - J. திருச்சீரலைவாய்
11. அழகர்கோயில் - K. தில்லை
12. பெரம்பூர் - L. திருஐயாறு
விடை: 1.G, 2H, 3.L 4.K, 5 B, 6. I, 7, J, 8. A, 9. F 10. E, 11. D, 12 C,

