தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'ஹாக்கி' கடவுள்!

'ஹாக்கி' கடவுள்!

'ஹாக்கி' கடவுள்!


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தயான் சந்த் சிங் பிறந்த தினம் ஆகஸ்ட் 29

பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ள இந்தியா, விளையாட்டு துறையில் இன்னும் பின் தங்கியே உள்ளது. தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டு முடிவுகளே இதற்குச் சான்று. விளையாட்டு மீதான ஆர்வத்தை வருங்கால சந்ததியினரிடம் உருவாக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரர் ஒருவரின் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடி வருகிறோம். அந்தப் பெருமைக்குரிய வீரர் யார் தெரியுமா?

இந்திய ஹாக்கியில் எத்தனையோ வீரர்கள் வந்திருக்கலாம்; சிலர் எப்போதாவது நினைவு கூரப்படலாம். ஆனால், ஓய்வுபெற்ற 68 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உலகைவிட்டு மறைந்த 37 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ஹாக்கி வீரர் பேசப்படுகிறார் என்றால் அந்த வீரர் மேஜர் தயான் சந்த் மட்டுமே!

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார் தயான். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த அவருடைய தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான்! ஹிந்தியில் சந்த் என்றால் 'நிலவு' என்று அர்த்தம். பெயரைப் போலவே, சந்திரனுக்கும் இவருக்கும் தொடர்பு உண்டு. அந்தக் காலத்தில் மைதானங்களில் மின்விளக்குகள் கிடையாது என்பதால், இரவு நேரத்தில் சந்திர ஒளியில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலம்! இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் சிறப்பான பங்களிப்பு செய்தவர். கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, களத்தில் பந்தைக் கடத்திச் சென்று கோல் அடிப்பதில் அசகாய சூரர்! அவருடைய அதிரடி ஆட்டத்தின் காரணமாக, 'ஹாக்கி மந்திரவாதி' (Hockey Wizard), 'ஹாக்கியின் கடவுள்' என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறார்! ஹாக்கி இருக்கும்வரை அவர் புகழ் நம்மிடம் இருந்தாலும் விளையாட்டுகளில் நம் நாடு பெறும் எழுச்சி ஒன்றே தயான் சந்த்துக்கு நாம் அளிக்கும் உண்மையான சல்யூட்!

இந்தத் தினத்தில், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளும் வழங்கப்படுகின்றன.

1928 (ஆம்ஸ்டர்டாம்), 1932 (லாஸ் ஏஞ்செல்ஸ்), 1936 (பெர்லின்), ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தார்.

1936: ஒலிம்பிக் போட்டியின்போது “ஹாக்கி மைதானத்தில் மேஜிக் ஷோவைப் பார்க்க, தயான் சந்த்தின் ஆட்டத்தைக் காணச் செல்லுங்கள்” என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

“கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போல் தயான் சந்த் கோல் அடிக்கிறார்” என பிராட்மேன் புகழ்ந்தார்.

டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில் உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us