தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அக்பரை எதிர்த்த ராணி

அக்பரை எதிர்த்த ராணி

அக்பரை எதிர்த்த ராணி


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீரமிக்க ராணி ஒருவர் இருந்தார். அந்த ராணிக்கு கத்திச்சண்டை, குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல் என எல்லா போர்க்கலைகளும் தெரியும். நாட்டைத் திறம்பட ஆட்சி செய்த அந்த ராணி மீது, மக்கள் அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார்கள்.

பக்கத்து நாட்டில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ஆட்சி செய்பவர் ஒரு பெண்தானே, எளிதாக வென்றுவிடலாம் என்று படையுடன் புறப்பட்டார். செய்தி, ராணிக்குப் போனது. அவர் கையில் வாளுடன் காற்றாய்ப் புரவியில் பறந்தார் போருக்கு.

புழுதி பறக்க, வாள் வீச்சுகள் ஓயாத சத்தம் எழுப்ப, இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. படையெடுத்து வந்த ராஜா கடைசியில் தோற்றார். அவர் மால்வா மன்னர் பஸ்பகதூர் (Baz Bahadur). வென்ற அரசி ராணி துர்காவதி.

துர்காவதி கி.பி. 1524 அக்டோபர் 5ல் பிறந்தவர். கோண்டுவானா நாட்டின் மன்னரான தால்பத் ஷா என்பவரை மணம் புரிந்தார். ராஜா 1550ல் மரணம் அடைய, ஐந்து வயதான தன் மகன் வீர் நாராயணனுக்கு முடிசூட்டி அவன் சார்பாக கோண்டுவானா பகுதியை (இன்றைய மத்திய பிரதேசம்)ஆட்சி செய்தார் துர்காவதி.

துர்காவதிக்கு சில சிற்றரசர்கள் கப்பம் கட்டினார்கள். ராணியின் புகழ் எட்டு திக்கும் பரவி, டில்லியை ஆளும் அக்பருக்கும் போனது.

சும்மா இருப்பாரா அவர்? 'கப்பம் கட்டு, இல்லா விட்டால் நாட்டை ஒப்படை' என்று ஆணை இட்டார். ராணி மறுத்தார். தன் படைத் தளபதி ஆசிப்கான் தலைமையில், பெரும்படையை அனுப்பி வைத்தார். ராணியின் படையில் 20 ஆயிரம் குதிரைகள், ஆயிரக்கணக்கான யானைகள், எண்ணற்ற வீரர்கள் கொண்ட படை இருந்தது. அதைவிடவும் பலம் வாய்ந்தது முகலாயப்படை.

ராணி துர்காவதி யானை மீது அமர்ந்து ஈட்டிகளையும், அம்புகளையும் பறக்க விட்டுக்கொண்டிருந்தார். ஆசிப்கான் விட்ட அம்பு ஒன்று ராணியின் தோள் பட்டையில் குத்தி பலத்த காயம் ஏற்படுத்த, அவரால் தொடர்ந்து அம்பு செலுத்த முடியவில்லை. இறுதியில் ராணி போர்க்களத்திலேயே வீரமரணம் (1564) அடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us