தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எப்படிக் கட்டினார்கள்?

எப்படிக் கட்டினார்கள்?

எப்படிக் கட்டினார்கள்?


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லணை! சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்ட இந்த அணை, இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கிறது. இதன் நீளம் 329 மீட்டர், அகலம் 20 மீட்டர்.

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது, இந்தக் காலத்தில்கூட கடினமான காரியம்தான். அதிகப் பொருட்செலவு செய்து, தேவைப்பட்டால் ஆற்றின் போக்கைத் திருப்பிவிட்டு, இன்றைக்கு அணைகள் கட்டப்படுகின்றன. ஆனால், 'நீரோட்டம் அதிகம் இருக்கும் காவிரி - கொள்ளிடச் சந்திப்பில், அந்தக் காலத்திலேயே கரிகாலன் அணை கட்டியது எப்படி?' என்ற கேள்வி எழுகிறது.

நமது கால்களை ஓடும் நீரில் அழுந்த ஊன்றினால், கால்களைச் சுற்றி இருக்கும் மண் அரித்துக்கொண்டு ஓடும். அதே சமயத்தில், காலின் அழுத்தம் காரணமாக, மணற்பரப்புக்குள் கால் மெல்ல ஊன்றிப் புதையும். வெடுக்கென்று காலை வெளியே இழுப்பது கடினம் எனும் அளவிற்கு, கால் புதையத் தொடங்கும். இந்த எளிமையான அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்டுதான், அந்தக் காலத்தில் கல்லணை கட்டப்பட்டது.

பெரிய பாறைக் கற்களை வெட்டிவந்து ஓடுகிற ஆற்றில் வரிசையாகப் போட்டதுதான், கல்லணை கட்டுமானத்தின் முதல் படி. நீரோட்டத்தின் காரணமாக, அந்த கற்களைச் சுற்றி இருக்கும் மண் அரிபடத் தொடங்கி, கனம் காரணமாகக் கற்கள் மெல்ல மண்ணுக்குள் அழுந்திப் புதைந்தன. ஒரு கல் வரிசைக்கு மேலே அடுத்த வரிசை, அதன் மேலே அடுத்த வரிசை என்று, ஒன்றன் மேல் ஒன்றாகக் கற்கள் அடுக்கப்பட்டன. மேலே பாரம் அழுத்த அழுத்த, அடியில் இருக்கும் கற்கள் கீழிறங்கி, அடி ஆழத்தில் இருக்கும் கடினமான நிலப்பரப்புவரை சென்று புதைந்துவிட்டன. கற்கள் செதுக்கப்படாமல், வடிவப்படுத்தப்படாமல் இருந்ததால், அவற்றின் போக்கில் ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ள களிமண்ணைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வலிமையான அடித்தளத்தின் காரணமாகவே, 1,800 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லணை உறுதி குலையாமல் இன்றளவிலும் பயன்பாட்டில் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us