தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தண்ணீர்! தண்ணீர்!

தண்ணீர்! தண்ணீர்!

தண்ணீர்! தண்ணீர்!


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் இருக்கும் பாலைவனங்களிலேயே, மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பது, இந்தியாவின் தார் பாலைவனத்தில்தான். இங்கு சராசரியாக, ஒரு சதுர கி.மீட்டரில் 83 நபர்கள் என்ற எண்ணிக்கையில் மக்கள் வாழ்கிறார்கள்.

காலங்காலமாக மழை நீரை முறையாகச் சேமித்துப் பயன்படுத்துவதால், இந்தப் பகுதி மக்களால் வறட்சியை சமாளித்து பாலைவனச் சூழலில் வாழ முடிகிறது.

படத்தில் இருக்கும் கூண்டு வடிவிலான இந்தக் கிணறு, தார் பாலைவனத்தில் மிகவும் பிரபலம். 'கூண்ட்' என்று இதற்கு பெயர். ஒரு பெரிய, உருண்டை வடிவிலான பானையின் கீழ்ப் பாதியை, மண்ணில் புதைத்த மாதிரி, இந்தக் கிணறு கட்டப்பட்டு இருக்கும். இதன் விட்டம்

3 - 4.5 மீட்டர் வரை இருக்கும். கிணற்றைச் சுற்றி இருக்கும் பரப்பில், சுண்ணாம்பு சரளைக் கற்களைப் பரப்பி, கிணற்றை நோக்கிச் சரியும் வகையில் தளம் போடுவார்கள்.

இந்தப் பரப்பில் விழும் மழை நீர், தரைமட்டத்தை ஒட்டிய கிணற்றின் சுவர் விளிம்பில் இருக்கும் துளைகள் வழியாகக் கிணற்றுக்குள் இறங்கும். வருடத்திற்கு 10 செ.மீ., மழைப்பொழிவு கொண்ட ஒரு பகுதியில், 100 சதுர மீ., மழை நீர்ப்பிடிப்பு கொண்ட ஒரு கூண்டுக் கிணறு 10,000 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் திறன் படைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us