sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

'தீ'க்கு எத்தனை பெயர்கள்?

/

'தீ'க்கு எத்தனை பெயர்கள்?

'தீ'க்கு எத்தனை பெயர்கள்?

'தீ'க்கு எத்தனை பெயர்கள்?


PUBLISHED ON : ஏப் 16, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தீ' யைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உண்டு.

வசு, தழல், வன்னி, எரி, அனல், கனல், அரி, கனலி, அங்கி, அங்காரகன், எழுநா, அழல், இறை, ஆரல் ஆகியன தீயைக் குறிக்கும் பொதுப் பெயர்கள்.

காட்டில் ஏற்படும் தீயை, 'காட்டுத் தீ, காட்டெரி, தாவம், வரையனல்' என்பர்.

விளக்கில் ஏற்றப்படும் தீ, தீபம், சுடர், தீவிகை, ஒளி.

தீயில் ஏற்படும் பொறியைத் தீப்பொறி, புலிங்கம் என்றனர்.

தீப்பந்தத்தைத் தீக்கடைக் கோல், அரணி என்று குறிப்பிடுகின்றன நமது பழந்தமிழ் நூல்கள்.

கொழுந்து விட்டு எரியும் தீக்கு உத்தரம், மடங்கள், தீத்திரள், ஊழித்தீ, கடையனல், வடவை, வடவாமுகம் போன்ற பெயர்கள் உண்டு.

தீயால் ஏற்படும் புகைக்கு தூபம், தூமம், குய், வெடி, ஆவி என்ற சொற்களில் குறிப்பிடப்படுகின்றன.

தீவிபத்துகளில், எரிந்து சாம்பலாகும் தன்மையுடைய திடப் பொருட்களான காகிதம், மரம், ரப்பர் போன்றவற்றில் ஏற்படும் தீயை அணைக்க, மணல், தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற திரவப் பொருட்களில் எரியும் தீயை அணைக்க, மணல், நுரை பயன்படுத்தப்படுகிறது. (சோடியம் கார்பனேட் கரைசல், நீர்த்த கந்தக அமிலம் சேர்ந்து, கார்பன் டை ஆக்ஸைடு நுரையாக உருவாகி வெளியே பீய்ச்சி அடிக்கப்படுகிறது.)

சமையல் எரிவாயு, அசிடிலின் போன்ற வாயுக்களில் ஏற்படும் தீயை, உலர் மாவைக் கொண்டு அணைக்கின்றனர்.

அலுமினியம், மெக்னீசியம் போன்ற உலோகங்களில் ஏற்படும் தீயைக் கட்டுப்படுத்த, உலர்ந்த மணல், உயர்தர உலர்மாவு பயன்படுத்தப்படுகிறது.

- புருஷோத்தமன்






      Dinamalar
      Follow us