sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

எவ்வளவு வீரர்கள்?

/

எவ்வளவு வீரர்கள்?

எவ்வளவு வீரர்கள்?

எவ்வளவு வீரர்கள்?


PUBLISHED ON : அக் 19, 2016

Google News

PUBLISHED ON : அக் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டபுரம் என்ற நாட்டின் மீது, நாகபுரம் என்ற நாடு படையெடுக்க இருந்தது. பட்டபுரம் நாட்டு உளவுத் துறை, எதிரி நாட்டின் படை பலத்தை அறிந்து, மன்னருக்கு சங்கேத குறிப்புகளாக அனுப்பியது. அதில், படைகள் மொத்தம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும், மொத்த வீரர்களின் எண்ணிக்கை 10,000 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. நான்காம் படையை விட, முதல் படையில் 200 நபர்கள் அதிகம் என்றும், இரண்டாம் படையில் மூன்றாம் படையை விட 200 நபர்கள் அதிகம் என்றும், நான்காம் படையில் இரண்டாம் படையை விட 200 நபர்கள் அதிகம் என்றும் குறிப்புகள் தெரிவித்தன. அமைச்சர்களைக் கூப்பிட்டு ஒவ்வொரு படையிலும் இருக்கும் வீரர்கள் எண்ணிக்கையை கண்டுபிடிக்கச் சொன்னார், மன்னர். நீங்களும் அவருக்கு உதவலாமே!.

விடை:

மூன்றாம் படையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை 'x' என்று வைத்துக்கொள்வோம். அப்போது இரண்டாம் படையில் x + 200 நபர்களும், நான்காம் படையில் x +200 + 200 = x + 400 நபர்களும், முதல் படையில் x + 400 + 200 = x + 600 நபர்களும் இருப்பார்கள்.

நான்கு படைகளில் மொத்தம் 10,000 நபர்கள்; ஆக, x+(x+200)+(x+400)+(x+600)=10,000; 4x+1200=10,000; x=2200.

முதல் படையில் 2,800 நபர்களும், இரண்டாம் படையில் 2,400 நபர்களும், மூன்றாம் படையில் 2,200 நபர்களும், நான்காம் படையில் 2,600 நபர்களும் இருப்பார்கள்.

இரா. செங்கோதை,

கணித ஆசிரியை, பை கணித மன்றம்






      Dinamalar
      Follow us