PUBLISHED ON : ஆக 29, 2016

ஒரு காகிதத்தை வெறும் கைகளால் எத்தனை முறை மடிக்க முடியும்? பலர் இதை சோதித்துப் பார்த்து இருக்கலாம். A4 அளவு காகிதத்தை எடுத்து மடித்து, பின் மடித்து, பின் மடித்து இப்படியே செய்தால் ஐந்து முறைக்கு மேல் அதை மடிக்க முடியாத அளவு கனம் ஆகிவிடும். ஒவ்வொரு முறை மடிக்கும் போதும் அதன் தடிமன் கூடிக்கொண்டே போகும். 10 அடி நீளமுள்ள மெல்லிய பேப்பரை எந்தக் கருவியையும் பயன்படுத்தாமல் அதிகபட்சம் ஒன்றின் மேல் ஒன்றாக எட்டு மடிப்புகள் வரை மடிக்க முடியும். அமெரிக்கப் பள்ளி மாணவி 'பிரிட்னி கல்லிவன்' (Britney Gallivan) 2001 ஆம் ஆண்டு இதற்கான சூத்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தார்.
இந்த சூத்திரத்தில்,
W = காகிதத்தின் அகலம்.
L = காகிதத்தின் நீளம்
t = காகிதத்தின் தடிமன்
n = மடிப்புகள் எண்ணிக்கை
முதல் சூத்திரம் : காகிதத்தை முதலில் பாதியாக மடித்து, பின் மடிக்கும்போது திசையை மாற்றி மாற்றி மடிப்பதை விளக்குகிறது.
இரண்டாவது சூத்திரம் : காகிதத்தை ஒரே மாதிரியாக மடிப்பதை விளக்குகிறது.
'பிரிட்னி' இதற்காக இரண்டு விதமான காகிதங்களைப் பயன்படுத்தினார்.
1. மிக மெல்லிய தங்கத் தகடு (சதுர வடிவம்)
2. 4000 அடி நீளமான டாய்லட் பேப்பர்
தங்கக் காகிதத்தை எதிர் எதிர் திசையிலும், டாய்லட் பேப்பரை ஒரே திசையிலும் (நீளவாக்கில்) மடித்துக் காட்டினார். இந்த முறையில் 12 மடிப்புகளை மடித்துக் காட்டினார். உலக அளவில் இதுவே சாதனையாக இன்று வரை உள்ளது. ஆனால் இதே மாதிரி சாதாரண A4 அளவு பேப்பரை மடிக்க முடியவில்லை. அதிகபட்சம் 5 மடிப்புகளையே மடிக்க முடியும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்!
