தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மனிதர்கள் அஞ்சும் பூச்சி!

மனிதர்கள் அஞ்சும் பூச்சி!

மனிதர்கள் அஞ்சும் பூச்சி!


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொசு... இந்தச் சின்னஞ்சிறு பூச்சி உலகில் இல்லாத இடமே இல்லை. மனித ரத்தம் மட்டுமின்றி தாவரச் சாறுகளையும் இது உணவாக உட்கொள்கிறது.

கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி விட்டன.

டைனோசர் காலத்தில் இருந்தே வாழ்கிறதோ!?

குடும்பம் குலிசிடே (Culicidae) இனம் பூச்சி

பெயர் காரணம்: மஸ்கேடாஸ் (Musketas) என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு 'சிறிய பூச்சி' என்று பொருள். இந்த வார்த்தையிலிருந்துதான் 'மஸ்கிடோ' (Mosquito) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த மொழியில் இந்த வார்த்தை இருக்கிறதாம். இலங்கையில் கொசுவை 'நுளம்பு' என்கிறார்கள்.

மாவீரர் அலெக்ஸாண்டரையே இந்தக் கொசுக்கள் தாக்கி வீழ்த்தியிருக்கின்றன. அலெக்ஸாண்டர் கி.மு. 323 ல் மலேரியா தாக்கி இறந்தார்.

தலையில் உள்ள நுண்ணிய உணர்விகள் (Sensors) மூலமாக மனிதனின் மூச்சு காற்று மற்றும் வியர்வை வாசனையை வைத்து துல்லியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன.

பெண் கொசுக்கள் மட்டுமே மனித ரத்தத்தை ருசிக்கின்றன. அதற்கு முட்டைகளை உருவாக்க மனித ரத்தம் தேவைப்படுகிறது.

கொசு தன் எடையை விட மூன்று மடங்கு எடையுள்ள ரத்தத்தை உறிஞ்சுகிறது.

ஆண் கொசுக்கள் பெரும்பாலும் தாவரச் சாறுகளை உணவாக எடுத்துக் கொள்கின்றன.

கொசுக்களால் ஏற்படும் நோய்த் தாக்குதல்கள்

மலேரியா

யானைக்கால்

டெங்கு

சிக்குன்குனியா

ஸிகா (zika)

3,500 கொசு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.

80 மனித ரத்தத்தை உறிஞ்சும் கொசு வகைகள்

நொடிக்கு 300 - 600 வரை வேகமாக இறக்கை அசைக்கின்றன.

சில கொசுக்கள் தங்கள் வகையைச் சேராத கொசுக்களின் முட்டையையே சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.

ஏடீஸ் (Aedes) வகை கொசுக்கள் பகல் நேரத்தில் ரத்தம் உறிஞ்சுபவை. க்யூலெக்ஸ் (Culex) வகை இரவானதும் தன் வேலையைத் தொடங்கும்.

8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில்கூட இவை வாழ்கின்றன.

கொசு கடித்துவிட்டது என்று நாம் சொல்லுகிறோம். ஆனால், அவற்றுக்கு பற்கள் (?) இல்லை. நீளமான நுண் துளை (ப்ரோபோஸ்சிஸ் - Proboscis) உறிஞ்சிகளை வைத்து அவை ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்கள் நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் ரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. அதனால் அந்த இடம் லேசாக மரத்துப்போகிறது. அதனால் கொசு கடிப்பதை

சட்டென உணர முடிவதில்லை.

7,25,000 பேர் உலகில், ஓர் ஆண்டில் கொசுக்கடியால் ஏற்படும் பாதிப்புகளால் உயிர் இழக்கிறார்கள்.

முட்டைகள்: 300 ஒரு பெண் கொசு ஒரே சமயத்தில் இடும் முட்டைகள். தன் வாழ்நாளில் மூன்று தடவை முட்டைகளை இடுகின்றன.

லார்வா (Larva): கேம்பூசியா (Gambusia) என்ற மீன்கள், தட்டான் பூச்சி (தும்பி) போன்றவை கொசுக்களின் லார்வாக்களை உண்ணும்.

ப்யூபா (Pupa)

இறக்கை முளைத்த கொசு

வாழ்நாள் 2 மாதங்கள். சில வகை கொசுக்களுக்கு 3 மாதங்கள்.

பெரும்பாலான கொசு விரட்டிகளில் 'டீட்' (DEET) ('டைதில்டோலமைடு' - Diethyltoluamide) என்ற வேதிப் பொருள் உள்ளது. இதைத் தொடர்ந்து சுவாசித்தால், உடல் நலனுக்கு கேடு விளையும். பாதுகாப்பான கொசு எதிர்ப்பு மருந்தாக 'பிகரிடின்' (Picaridin) மற்றும் எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் (Lemon- Eucalyptus Oil) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us