தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் சிங்கம் இல்ல, குரங்கு

நான் சிங்கம் இல்ல, குரங்கு

நான் சிங்கம் இல்ல, குரங்கு


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரியவகை உயிரினம், சிங்கவால் குரங்கு. சிங்கத்தைப் போல தலையைச் சுற்றி பிடரியும், நீண்ட வாலின் நுனியில் முடியும் காணப்படுவதால், இதற்கு இந்தப் பெயர். இவற்றைப் பற்றி சில தகவல்கள் :

* காடுகளில், மரங்களின் உச்சியில் வசிக்கும் இவை, பழங்கள், காய்கள், விதைகள், இலைகள், பூச்சிகளை சாப்பிடுகின்றன.

* பல்வேறு வகையான பழங்களை சாப்பிட்டு, விதைகளைப் பரவலாக்கம் செய்வதால், காடுகளின் வளத்தை அதிகரிப்பதில் இவற்றிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

* பிற இனங்களுடன் சேராமல் தனி கூட்டமாக வாழும் இயல்புடையவை.

* 15 முதல் 20 குரங்குகள் இருக்கும் ஒரு கூட்டத்தை, ஆண் குரங்கு வழிநடத்தும்.

* காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதால் போதுமான பழங்கள் கிடைக்காமல் இவற்றின் உணவுப் பழக்கம் மாறி வருகிறது.

* காட்டுப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் வழங்கும் பிஸ்கெட், சிப்ஸ் போன்ற உணவுக்கு பழக்கப்படத் தொடங்கிவிட்டது. இதனால் இவற்றின் இரை தேடும் பழக்கம் மறக்கக்கடிக்கப்படுகிறது.

* காட்டு வளம் குறைந்து வருவதால், இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவின் அரியவகை விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us