உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
பேன்களை ஒழிப்பதற்கு நாம் எவ்வளவோ சிரமப்படுவோம். ஆனால், பேன்களின் மரபணுவை ஆராய்ச்சி செய்து, மனிதர்கள் எப்போது தோன்றினார்கள், எப்போது ஆடை அணிய ஆரம்பித்தார்கள், ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்குச் சென்றார்கள் போன்ற தகவல்களைக் கணக்கிடுகிறார்கள். மனிதர்களின் தலையில் வசிக்கும் பேன்களுக்கும், சிம்பான்சியின் உடலில் வசிக்கும் பேன்களுக்கும் 60 லட்சம் வருடங்களுக்கு முன்னர் ஒரே மூதாதையர்கள் இருந்ததாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம், சுமார் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்ற ஆரம்பித்து இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. பேன்கள் நம் விருப்பத்துக்கு உரியவை அல்ல. இருந்தாலும் அவற்றால் இப்படிச் சில வரலாற்று உண்மைகளை அறியும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது !
