தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் விசில் அடிப்பேன்!

நான் விசில் அடிப்பேன்!

நான் விசில் அடிப்பேன்!


PUBLISHED ON : செப் 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேப்பிபரா (Capybara)

உயிரியல் பெயர்: 'ஹைட்ரோகோரஸ் ஹைட்ரோசாரிஸ்' (Hydtrochoerus hydrochaeris)

வேறு பெயர்: 'வாட்டர் ஹாக்' (Water Hog)

உலகில் உள்ள கொறித்துண்ணி (Rodent - ரோடன்ட்) இனங்களில் மிகப்பெரியது 'கேப்பிபரா'. மத்திய, தென் அமெரிக்கா பகுதிகளில் வாழும் பாலூட்டி உயிரினம். நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளே இவற்றின் வாழ்விடம். உடல் அடர்த்தியான ரோமங்களுடன் பழுப்பு, சிவப்பு, சாம்பல், மஞ்சள் நிறங்களில் இருக்கும். தலையின் மேற்பகுதியில் கண்கள், காதுகள், மூக்கு அமைந்திருக்கும். நீருக்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டியபடி இருக்க, இதன் உடல் அமைப்பு உதவுகிறது. உடல் உருண்டை வடிவத்தில் பருமனாக இருக்கும். தாவர உண்ணியான இதன் உணவு புல், நீர்த்தாவரங்கள், பழம், மரப்பட்டை போன்றவை. எலி, அணில்களைப் போல உணவைக் கொறித்து உண்ணும் வழக்கமுடையவை. ஒரு நாளைக்கு மூன்று கிலோ அளவு உண்ணும். வேகமாக நீந்தும். கூட்டமாகத் திரியும் இயல்புடையவை.

நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள புதர்களில் வளைதோண்டி அதில் வசிக்கும். இனப்பெருக்க காலம் 5 மாதங்கள். ஒரு முறைக்கு 5 குட்டிகள் வரை ஈனும். ஜாகுவார், முதலை, கழுகு போன்றவை இவற்றின் எதிரிகள். எதிரிகளைக் கண்டால் குரைப்பதுபோல உரக்கச் சத்தம் எழுப்பி, தன் இனத்தை எச்சரிக்கை செய்யும். விசில் அடிப்பதைப்போலச் சத்தமும் எழுப்பும். வியர்வை போன்ற திரவத்தின் மணத்தின் மூலம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன.

நீளம்: 4.5 அடி

எடை: 30 முதல் 70 கிலோ வரை

வேகம்: மணிக்கு 35 கி.மீ.

வாழ்நாள்: 10 ஆண்டுகள்

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us