PUBLISHED ON : டிச 16, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழின் வல்லின எழுத்துகளை வைத்து ஒரு விளையாட்டு. வல்லின மெய்யும், அதனோடு அகரம் சேர்ந்த உயிர்மெய்யெழுத்தும் தரப்பட்டுள்ளன. இவை வருமாறு ஒரு சொல்லை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அந்தச் சொல்லுக்கான உதவிக் குறிப்பும் தரப்பட்டுள்ளது. காலிக் கட்டத்தில் உங்கள் கண்டுபிடிப்பை எழுதுங்கள்.
1. க்க - தொலைவு அல்ல
2. ச்ச - துணிவு அல்ல
3. ட்ட - நல்லது அல்ல
4. த்த - அமைதி அல்ல
5. ப்ப - படகு அல்ல
6. ற்ற - இறக்கம் அல்ல
விடைகள்:
1. பக்கம்
2. அச்சம்
3. கெட்டது
4 சத்தம்
5. கப்பல்
6. ஏற்றம்