PUBLISHED ON : பிப் 25, 2019

வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றி வரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
”நிலத்தடி நீர் குறையும்போது, இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சாரத் தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக்.
அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு (கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு (கலிஃபோர்னியா, கொலராடோ, ஓரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது.
