தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கற்காலத்தில் இந்தியா!

கற்காலத்தில் இந்தியா!

கற்காலத்தில் இந்தியா!


PUBLISHED ON : நவ 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் பல்வேறு பகுதிகளில் கற்கால மக்கள் வாழ்ந்தார்கள். பழங் கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என, நம்முடைய மூதாதையர்களின் காலத்தைப் பிரிக்கலாம். ஒவ்வொரு காலத்தையும் நிர்ணயம் செய்ய, ஆண்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் பொருட்களை ஆராய்ந்த பின் எந்த காலத்திற்குரியது என பிரிக்கப்படும். இந்தியாவில் பல பகுதிகளில் நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் என்பதை தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நம் நாட்டின் முக்கிய தொல்லியல் ஆய்வுப் பகுதிகளை இங்கு பார்ப்போம்.

1 சிவாலிக் மலை (Sivalik hills)

இடம்: சிந்து நதிக்கரை தொடங்கி பிரம்மபுத்ரா நதி வரை பல ஆய்வு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

காலம்: பழங்கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: 20 லட்சம் ஆண்டுகள் பழமையான கற் கருவிகள்.

தொல்லியல் ஆண்டு: 19ஆம் நூற்றாண்டு முதல்

2 பர்சாஹூம் (Burzahum)

இடம்: காஷ்மீர்

காலம்: புதிய கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: மண் பூசப்பட்ட குழி வீடுகள். பூமிக்கடியில் பாதாளத்தில் படிக்கட்டுகள் இருந்திருக்கின்றன. எலும்புகளால் செய்யப்பட்ட சில கருவிகளான ஊசிகள், தூண்டில். மனித புதை மேடு, விலங்குகளின் எலும்புகள் (செல்லப்பிராணிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம்)

தொல்லியல் ஆண்டு: 1939 முதல்

3 மெஹெர்கர் (Mehrgarh)

இடம்: பலூசிஸ்தான்

காலம்: புதிய கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: வேட்டையாடி உணவு சேகரித்தலிலிருந்து, நிரந்தர வேளாண்மைக்கு மாறியதற்கான அடையாளங்கள். முதன்மைச் சான்று: பருத்தி

தொல்லியல் ஆண்டு: 1974 - 1986

4 லஹுரதேவா (Lahuradeva)

இடம்: கலீகாபாத், உத்தரப் பிரதேசம்

காலம்:புதிய கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: இங்கு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8,000 ஆண்டுகள் பழமையானவை. வேளாண்மை நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

தொல்லியல் ஆண்டு: 2001- 2004

5 மஹாதகா (Mahadaga)

இடம்: அலகாபாத், உத்தரப் பிரதேசம்

காலம்: இடைக் கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: கசாப்பு தளம். கால்நடைகள், காண்டாமிருகம், பன்றிகள், ஆமைகளின் எலும்புகள் இருந்தன. மனிதப் புதை மேடுகளின் சில பொருட்கள்.

தொல்லியல் ஆண்டு: 1977 - 1978 (70களில் நடந்த முக்கிய ஆய்வு)

6 பீம்பேட்கா (Bhimbetka)

இடம்: போபால், மத்தியப் பிரதேசம்

காலம்: பழங்கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: குகைகள், பாறை ஓவியங்கள். உலகின் பழமையான குகைகளுள் ஒன்று.

தொல்லியல் ஆண்டு: 1957-1958

7 ஹன்ஸ்கி சமவெளி (Hunsgi Valley)

இடம்: யாதகிரி, கர்நாடகம்

காலம்: பழங்கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: கருவிகள் மட்டுமே செய்யப் பயன்படுத்தப்பட்ட தொழிற்கூடம். கிரானைட் கற்பாறைகள்.

தொல்லியல் ஆண்டு: 1975 - 1976

8 அத்திரம்பாக்கம் (Attirampakkam)

இடம்: சென்னை, தமிழகம்

காலம்:பழங்கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: கற்களால் செய்யப்பட்ட கை கோடரி. விலங்குகளில் புதைப் படிவங்கள்.

தொல்லியல் ஆண்டு: 1863

9 ஆதிச்சநல்லூர் (Adichanallur)

இடம்: தூத்துக்குடி, தமிழகம்

காலம்: பெருங் கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: பானை ஓடுகள், பிராமி எழுத்துகளைக் கொண்ட தாழிகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள்.

தொல்லியல் ஆண்டு: 1876 முதல்

10 நாகார்ஜுனகொண்டா (Nagarjunakonda)

இடம்: குண்டூர், ஆந்திரம்

காலம்:* பெருங்கற்காலம்

கண்டுபிடிக்கப்பட்டவை: பெளத்த கல்வெட்டுகள்

தொல்லியல் ஆண்டு: 1954 - 1960

11 கீழடி (Keezhadi)

இடம்: சிவகங்கை, தமிழகம்

காலம்: கி.மு. 6ஆம் நூற்றாண்டு

கண்டுபிடிக்கப்பட்டவை: சுட்ட செங்கற்களாலான கட்டடங்கள், பானை ஓடுகள் எழுத்துகளோடும், கீறலோடும் கிடைத்திருக்கின்றன, பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள், இரும்பால் செய்ய்பட்ட பொருட்கள்.

தொல்லியல் ஆண்டு: 2015 முதல்

12 சிந்து சமவெளி (Indus valley)

இடம்: வடமேற்கு இந்தியப் பகுதிகள், பாகிஸ்தான்

காலம்: 8,000 ஆண்டுகள் பழமையானவை

கண்டுபிடிக்கப்பட்டவை: பானை ஓடுகள், ஆடைகள், இடுகாடு, வழிபாட்டு உருவங்கள், இன்னும் பிற...

தொல்லியல் ஆண்டு: 1920 முதல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us