தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!


PUBLISHED ON : அக் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், விமானங்கள் மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை, வரும், 2035ல், 44 கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது . ஜெனீவாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு, ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை குறித்த ஆய்வு கணிப்பு அது. உலகஅளவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை , தற்போது, 380 கோடியாக உள்ளது. இது, அடுத்த 20 ஆண்டுகளில், 720 கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே, அதிகமாக விமானத்தில் பயணிப்பவர்களாக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 'அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் 32 கோடி பேர் புதிதாக விமான பயணிகளாக வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, உலகில் மூன்றாவது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியாவை உயர்த்தும்; இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும். வரும், 2035ம் ஆண்டில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை, 44 கோடியாக உயரும்' என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us