தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மாடித் தோட்டம் அமைக்க மானியம்

மாடித் தோட்டம் அமைக்க மானியம்

மாடித் தோட்டம் அமைக்க மானியம்


PUBLISHED ON : அக் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாடியில் தோட்டம் அமைப்பதை, தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக, மாடி தோட்டத்துக்கு தேவையான பொருட்கள், 300 ரூபாய் விலையில் வழங்குவதாக, தமிழக தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது. இதன் உண்மை மதிப்பு, 5௦௦ ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக நகரங்களில், குறைந்த அளவு இடத்திலும் தோட்டம் அமைக்க, தமிழக அரசு, 2013-14ஆம் ஆண்டு மாடி தோட்டம் திட்டத்தை, சென்னையில் தொடங்கியது. விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய காய்கறி கிட், குறைந்த விலையில் கொடுக்கப்பட்டது. இதற்கு, நகரவாசிகளிடம் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, 'நீங்களே செய்து பாருங்கள்' என்ற திட்டம், கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது, 'மாடித் தோட்ட இயக்கம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுவரை, 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'கிட்', இனி, 300 ரூபாய்க்கு கிடைக்கும். இதை தமிழக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டின் மாடியில் 'நிழல் குடில்' அமைத்து தோட்டம் போட, வலை வழங்கப்பட உள்ளது. இது 3,550 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் சந்தை விலை, 7,1௦௦ ரூபாய். இதை வாங்க, அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

vivasayam.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us