தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செய்தி அறிவோம்: எலி பிடிக்க பரிசு வழங்கும் நகராட்சி

செய்தி அறிவோம்: எலி பிடிக்க பரிசு வழங்கும் நகராட்சி

செய்தி அறிவோம்: எலி பிடிக்க பரிசு வழங்கும் நகராட்சி


PUBLISHED ON : அக் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் மிக மாசடைந்த நகரங்களில் ஒன்றாக, இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்தா உள்ளது. இங்கு மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், குப்பை அதிகம் சேர்கிறது. இதனால், எலித்தொல்லை அதிகரித்துள்ளது. பெருகிவரும் எலிகளைக் கட்டுப்படுத்த, ஜகார்தா நகர நிர்வாகம், புதுமை திட்டத்தை அறிவித்துள்ளது. நகரவாசிகள் எலியைப் பிடித்துக் கொடுத்தால், சன்மானம் வழங்கும் திட்டம்தான் அது. ஒரு எலிக்கு, 100 ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'இந்த திட்டம் வெற்றி பெற்றால், நோய் பரப்பும் எலி பெருக்கம் கட்டுக்குள் வரும்' என, ஜகார்தா துணை கவர்னர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது, வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில், இதேபோல் எலியைப் பிடிக்கும் திட்டம் அமலில் இருந்தது. பிடிபடும் எலி பற்றிய கணக்கை காட்ட, எலி வாலை, நகர அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால், நகரவாசிகள் எலியை பிடித்து வாலை மட்டும் வெட்டி எடுத்து விட்டு, எலியைத் தப்ப விட்டனர். இதனால், எலிகள் பெருக்கம் குறையவில்லை. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். தற்போது இந்தோனேசியாவில் இது போல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்று பிரச்னை ஏற்படாமல் தடுக்க, பிடித்த எலியை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

nst.com.my

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us