தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அகச்சிவப்பு செவி வெப்பமானி!

அகச்சிவப்பு செவி வெப்பமானி!

அகச்சிவப்பு செவி வெப்பமானி!


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நட்சத்திரங்களின் வெப்பநிலையை, அகச்சிவப்புக்கதிர் உணரிகளைக் கொண்டு (infrared sensor) அறியும் நுட்பத்தைக் கண்டறிந்தது நாசா. இதன் மூலம், பூமியில் இருந்து தொலைநோக்கி வழியாகவும், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தும் நட்சத்திரங்களின் வெப்பநிலையை அளவிடலாம்.

நாசாவுடன் டையடெக் கார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளிகளின் உடல் வெப்பநிலையைக் கண்டுபிடிக்க, அகச்சிவப்பு செவி வெப்பமானியை (infrared ear thermometer) உருவாக்கியது.

பாதரச வெப்பமானியைப் பயன்படுத்தி, அளவீடுகளைப் பெறுவது கடினமான பணி. மேலும், அது எந்த அளவிற்குத் துல்லியமான அளவீடுகளைத் தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குறிப்பாக அக்கருவியை குழந்தைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளிடம் சோதிக்கும்போது, உடைந்துவிட்டால் பெரும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இம்மாதிரியான சவால்கள் ஏதுமற்ற திறன்மிகுந்த ஒரு கருவி, -செவி வெப்பமானி.

நோயாளியின் காதிற்குள் இக்கருவியை நுழைத்து, ஒரு பொத்தானை அழுத்தினால் இரண்டே நொடியில் அவரது உடல் வெப்பநிலை என்ன என்பது நமக்குத் தெரிந்துவிடும்.

சமீபத்தில் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டபோது, இக்கருவி பெருமளவில் பயன்பட்டது. இக்கருவியின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட மருத்துவர்கள், பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றினர்.

அடுத்தமுறை மருத்துவமனைக்குச் செல்லும்போது, அங்கு என்ன வகை வெப்பமானியைப் பயன்படுத்து கிறார்கள் என்று பார்ப்பீர்கள் இல்லையா?

-சரவணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us