தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பற்களைச் சீராக்கும் மெல்லிய கிளிப்புகள்!

பற்களைச் சீராக்கும் மெல்லிய கிளிப்புகள்!

பற்களைச் சீராக்கும் மெல்லிய கிளிப்புகள்!


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரிணாம வளர்ச்சியில் பிற குரங்கு வகைகளைவிட நமக்குத் தாடையின் அளவு குறைந்துவிட்டது. ஆனால், அதற்கேற்றாற்போல பற்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதனால், வாயில் பற்கள் குறுக்கு நெடுக்காக வளரும். உணவைப் பற்களால் சரிவரக் கடிக்க முடியாது.

முக அமைப்பும் மாறும். பற்களின் வளர்ச்சியைச் சீராக்க, மருத்துவர்கள் பற்களில் க்ளிப் பொருத்துவார்கள். அவை மெதுவாக பற்களை, இருக்க வேண்டிய உரிய இடத்துக்கு இழுத்து வரும். ஆனால் க்ளிப்புகள் பற்களின் மேல் பொருத்தியிருப்பதால், பார்க்க விநோதமாக இருக்கும். இதற்காகத் தீர்வு கண்டுபிடிக்கவேண்டிய அழுத்தம் மருத்துவர்களுக்கு இருந்தது. இதற்கு உதவியதுதான் மெல்லிய பற்கிளிப்புகள்.

பல முன்னேறிய நாடுகள், விமானங்களின் இஞ்சின் வெப்பத்தைக் கண்டுபிடித்து தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைக்கொண்டுள்ளன. இந்த ஏவுகணைகளை தேடித் தொடர, அகச்சிவப்புக் கதிர்களையும், ஒளியையும் சிதறடிக்காமல் உள்ளே புக அனுமதிக்கும் பொருள் ஒன்று தேவை.

இதைக் கண்டறியும் முயற்சியில்தான் நாசா, ஒளிபுகக்கூடிய பலபடிக அலுமினா (Transparent Polycrystalline Alumina) என்ற பொருளைக் கண்டுபிடித்தது. எஃகைவிட வலுவான, அதேநேரம் ஒளிபுகக்கூடிய பண்பு கொண்டது இந்த அலுமினா.

கூர்மையற்ற மழுங்கிய ஓரங்கள் கொண்டதால் எளிதில் உடையாது. அதில் இருந்துதான் தற்போதைய மிக மெல்லிய பற்கிளிப்புகள் (Invisible Braces) உருவாயின.

- ராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us