தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விண்வெளிப் போர்வைகள்

விண்வெளிப் போர்வைகள்

விண்வெளிப் போர்வைகள்


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு வேடிக்கைக்காக, Space Blanket என்பதை 'விண்வெளிப் போர்வைகள்' என்று மொழி பெயர்த்தாலும், இதற்கு வேறு பல பெயர்களும் உள்ளன. அவசர காலப் போர்வை, முதலுதவிப் போர்வை, பாதுகாப்புப் போர்வை, தட்பவெப்பப் போர்வை, காலநிலைப் போர்வை, வெப்பத் துண்டு இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இது குறைந்த எடையுடன் இருக்கும். வெப்பத்தை தடுத்துத் திருப்பி அனுப்பவல்ல ஒருவகை மெல்லிய பிளாஸ்டிக் படலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

இதுதான், தட்பவெப்பத்தைச் சமாளிப்பதற்காக, விண்கலங்களில் வெளிப்புறப் பரப்புகளில் பயன்படும் பொருள்.

இதன் பயன்பாடு, நம்மைப் போன்ற சாதாரண மக்களிடத்திலும் உண்டு.

ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் வெப்ப இழப்பை இது குறைக்கும். எடையும், அடர்த்தியும் குறைவாக இருக்கும். எனவே, மடித்து வைத்தால் மிக மிகக் குறைவான இடத்தையே எடுத்துக்கொள்ளும். முதல் உதவிப் பெட்டிகளிலும், முகாம் இடும் உபகரணங்களோடு சேர்த்தும் இது பயன்படுகிறது.

வழி தெரியாத புது இடங்களில், காடுகளில் முகாம் இடும்போது யாராவது தொலைந்து போய்விட்டாலும் இது உதவும். இதன் உலோகத் தன்மை உள்ள பரப்பு, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும். தொலைதூரத்துக்கும் இந்தப் பிரதிபலிப்புத் தெரியும். அதனால், இதை ஆட்டிக் காட்டினாலே, தொலைந்துபோனவரைத் தேடுபவர்களுக்கு அவர் இருக்கும் இடம் சுலபமாகத் தெரிந்துவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us