உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 09, 2023
அ நிறம் | அளவு
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு, ஆங்கில எழுத்தாளர்களைக் கண்டுபிடியுங்கள்.
மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தை உருவாக்கியவர். இந்தியச் சிறுவர்கள், குறிப்பாக, கிராமத்துச் சிறுவர்களிடையே, ஆங்கில மொழி வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிய எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.
இவர் பெயரில் ஒரு தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இவரது நாவல்களின் கதைக்களம், பெரும்பாலும் காடு தான்.
இயற்கையை வர்ணித்து எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய 'த ப்ளூ அம்ப்ரெல்லா' எனும் குறுநாவல், திரைப்படமாக வெளிவந்துள்ளது.
தன் எளிய மொழிநடையால் அனைவரையும் கவர்ந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெண் எழுத்தாளர். இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர்.
விடைகள்: 1.ஆர்.கே.நாராயண், 2.ஜிம் கார்பெட், 3.ரஸ்கின் பாண்ட் 4.சுதா மூர்த்தி
