உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 11, 2017

அ நிறம் | அளவு
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத், உஜ்ஜைனி, நாசிக், ஹரித்துவார் ஆகிய நகரங்களில் நடக்கும் கும்பமேளா விழாவிற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிட்டியுள்ளது. இம்மாபெரும் விழா, இந்தியாவின் புனிதமான கலாசார பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்று என ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இத்தகவலை மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா டிவிட்டரில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். தென்கொரியாவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
