தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தூசு என்றால் சாதாரணமா

தூசு என்றால் சாதாரணமா

தூசு என்றால் சாதாரணமா


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இதெல்லாம் எனக்குத் தூசு மாதிரி' ஒரு வேலையை எளிதாகச் செய்துவிடுவேன் என்பதை இப்படிச் சொல்வோம். எடை அற்றது தூசு என்பதால் அப்படிச் சொல்கிறோம். தூசு என்றதும் சாலையில், வீடுகளில், பொது இடங்களில் பறக்கிற மண் புழுதி, வாகனங்களால் ஏற்படுகிற தூசு இவைதான் நம் நினைவுக்கு வரும். காற்றினால் கடத்திச் செல்லப்படும் மிக நுண்ணிய துகள்கள்தான் தூசு. உலர்ந்த மண்ணின் நுண் துகள்கள், தொழிற்சாலைப் புகை மூலம் வெளியேறும் புகை, சாம்பல் இவை எல்லாவற்றிலும் தூசு கலந்திருக்கிறது. இது மட்டுமல்ல, கடற்கரைக் காற்றில் நிறைந்து இருக்கும் நுண்ணிய உப்புத் துகள்கள், தாவரங்களில் இருந்து வெளிப்படும் மகரந்தத் துகள்கள் என பல வகையான தூசிகள் உள்ளன.

தூசியால் வரும் கேடுகள்: தூசியால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. தூசி உள்ள காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலனுக்குக் கேடு ஏற்படுகிறது.

தூசியால் நடக்கும் நன்மைகள்: மழை மேகங்கள் உருவாக காற்றில் உள்ள நுண்ணிய நீர்த் துகள்களே காரணமாக அமைகின்றன. சூரிய ஒளியை வடிகட்டுதல், பனிப் பொழிவுகள் உருவாதல் போன்றவற்றிலும் தூசிகளுக்குப் பங்கு உண்டு. வானம் நீல நிறமாகத் தெரிவதற்குத் தூசிகளும் ஒரு காரணம். சூரியக் கதிர்களில் சிலவற்றை பூமிக்கு வந்து சேராமல் தடுத்துக் காப்பதும் தூசிதான். இதன் மூலம் பூமியின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us