PUBLISHED ON : நவ 28, 2016

பூமியில் இருந்து, சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். அங்கு, உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா என, பல்வேறு நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'நாசா', கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டில், கியூரியாசிட்டி (Curiosity) விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது.
அது நடத்திய ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது. உடோப்பியா பிளானிசியா (Utopia Planitia) என்று பெயரிடப்பட்டுள்ள இடத்தில், நிலத்திற்கு அடியில், 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை, நீர்த்தேக்கம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதில், 85 சதவீதம் நீர், பனிக்கட்டியாக உறைந்துள்ளது. தண்ணீர் காணப்படுவதால், அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று, நாசா தெரிவித்துள்ளது.
உட்டோப்பியா பிளானிசியாவில் உறைந்துள்ள தண்ணீர் (போட்டோ- நாசா)

