sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

டியூஷன் முன்னேற்றமா? முட்டுக்கட்டையா?

/

டியூஷன் முன்னேற்றமா? முட்டுக்கட்டையா?

டியூஷன் முன்னேற்றமா? முட்டுக்கட்டையா?

டியூஷன் முன்னேற்றமா? முட்டுக்கட்டையா?


PUBLISHED ON : மார் 06, 2017

Google News

PUBLISHED ON : மார் 06, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், இன்றைய சூழலில் டியூஷன் எனப்படும் தனிவகுப்புகள் மிக மிக அதிகம். இதுமாதிரியான தனிவகுப்புகள் பற்றி, மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து ஹையர் செகண்டரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் நால்வரை சந்திக்கவைத்து, விவாதிக்க வைத்தோம். அவர்களின் விவாதம் நமது பட்டம் மாணவர்களுக்காக. இதோ...

அபிஷேக்:

இன்னிக்கு டியூஷன் எல்லாம் பள்ளிக்கூடம் மாதிரியே கூட்டமாகத்தான் இருக்கு. அதுல போய் என்ன சிறப்பாக கற்றுக்கொள்ள முடியும்? நாள் முழுவதும் பள்ளியில் படிக்கிறோம். அங்கே படிக்க முடியாததை, ஒரு மணிநேரம் தனிவகுப்பில் என்ன படித்துவிட முடியும்னு தெரியலை. ஹையர் கிளாஸ் படிப்பவர்களுக்கு தனிவகுப்புகள் என்றால், கொஞ்சம் நியாயம் உண்டு. ஆனால் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பசங்க எல்லாம் தனிவகுப்புகளுக்கு போறாங்க. விளையாடவேண்டிய வயதில், இப்படி படி படின்னு அனுப்புறது எப்படி சரியாக இருக்கமுடியும்? இதன்மூலம் மாணவர்களின் மனஅழுத்தம் தான் அதிகமாகுது. தனிவகுப்புகளே தேவையில்லை.

சத்யசந்தன்:

தனிவகுப்புகள் இன்று அவசியமானதாகிவிட்டது. பள்ளியில் மொத்தமாக பாடங்களை நடத்திவிட்டு, அடுத்தடுத்த பாடங்களுக்கு போயிடுவாங்க. ஆனா தனிவகுப்பில், ஒவ்வொரு மாணவர் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது. பள்ளியில் படித்த பாடங்களை மாலையிலேயே தனிவகுப்பில் மீண்டும் படிக்கும்போது, ஒன்றுக்கு இருமுறை படிக்க வாய்ப்பும் கிடைக்குது. அதனாலதான் டியூஷன் வேணும்.

பால சூர்யா:

பள்ளியில் நடத்தும்போதே, பாடங்களை கூர்த்து கவனிக்கலாம். வீட்டுக்கு வந்தபின், பெற்றோரிடம் சந்தேகங்களைக் கேட்டு, பாடங்களை படிக்க முடியும். இதற்கு ஏன் தனிவகுப்புகள் போகணும்?

முகேஷ்:

சின்ன வயசுலேயே தனிவகுப்புகள் ஏன் தேவைன்னா… அடிப்படை பலமானதாக இருக்க வேண்டும் இல்லையா? அதனால்தான், சின்ன வயசிலேயே அனுப்புறாங்க. ஒரு கட்டடத்துக்கு எப்படி கடக்கால் தேவையோ அப்படித்தான் கல்வியும். சின்னவயசுலயே தனிவகுப்புக்கு போறதை அப்படித்தான் பார்க்கணும். அப்புறம் பெற்றோரிடம் கேட்கலாம்னு சொல்லுறாங்க. எல்லா அப்பா, அம்மாவும் வீட்டில இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா? ரெண்டு பேரும் வேலைக்குப் போகும் வீடுகள் இன்னிக்கு நிறைய இருக்கு. இதுல அவங்களால பிள்ளைகளுக்கு எப்படி பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்? அதுக்கு அவங்களுக்கு நேரம் கிடைக்குமா?

சத்யசந்தன்:

அதுமட்டுமல்ல… பெற்றோரில் ஒருத்தங்க வீட்டில் இருந்தாலுமே, அவங்களுக்கு நம் பாடங்கள் புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இருக்குமான்னு இன்னொரு சந்தேகம் வருது. ஏன்னா… அவங்க பள்ளிப் பாடங்களைப் படிச்சு பல ஆண்டுகளாகி இருக்கும். மறந்து போயிருப்பாங்க. தனிவகுப்புல பக்கத்துல இருக்கிற மாணவர்களிடம் சந்தேகம் கேட்டுக்கலாம்.

பால சூர்யா:

ஏன் பள்ளியில் பக்கத்தில் இருக்கும் பையனிடம் சந்தேகம் கேட்கமுடியாதா? அதற்கு தனிவகுப்புதான் போகணுமா? பள்ளியில் நடத்துற பாடத்தைக் கூர்ந்து கவனிச்சுட்டாலே போதும். சாயங்காலம் வீட்டுக்கு வந்து பாடங்களை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம். அப்படியும் சந்தேகம் தீராவிட்டால், அடுத்தநாள் பள்ளியிலேயே ஆசிரியரிடம் கேட்கலாமே… அவங்க மாட்டேன்னா சொல்லப்போறாங்க? அப்புறம், ரெண்டுபேரும் வேலைக்குப் போகும் பெற்றோர்ன்னு சொல்லுற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வேலை முடிச்சு, அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குத்தானே வரப்போறாங்க. அப்படி வர்றவங்க பிள்ளைங்களோட கொஞ்ச நேரம் செலவழிக்க முடியாதா? தனிவகுப்புகள்ல சேர்க்கறதுக்கு முக்கியமான காரணம், பசங்க வீட்டுல படிக்க மாட்டாங்கன்னு பெற்றோர் நினைக்கறதுதான். அவங்களுக்கு நாம எப்ப பார்த்தாலும் படிச்சுக்கிட்டே இருக்கணும். அதுதான் பிரச்னை.

முகேஷ்:

வகுப்பு, மேலே போகப்போக பாடத்திட்டங்கள் கடுமையாக இருக்கு. இப்ப பத்தாம் வகுப்போ, பன்னிரெண்டாம் வகுப்போ படிக்கும் மாணவர்களிடம் கேட்டுப் பார்த்தா தெரியும். பள்ளியில பாடங்களை வேகவேகமாக நடத்திட்டு போயிடுவாங்க. இன்னொண்ணு, மார்க் வாங்கறது. தேர்வுல என்ன மாதிரியான கேள்விகள் வந்திருக்கு. அதற்கு ஏத்தாப்போல எப்படி தயாராகணும்னு தனிவகுப்புகளில்தான் பயிற்சி கொடுப்பாங்க. மார்க் முறை எப்போ ஒழியுதோ அப்போதான் தனி வகுப்புகளும் ஒழியும்.

அபிஷேக்:

இப்ப டியூஷன் மட்டுமல்லாமல்… தனித்திறன் வகுப்புகளுக்கும் டியூஷன் மாதிரித்தான் போகவேண்டியிருக்கு. நாலு மணிக்கு பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தால், உடனே நாலு அஞ்சுக்கு பாட்டுகிளாஸுக்கு ஓடு, அப்புறம் செஸ் வகுப்புக்கு ஓடு; அப்புறம் அந்த விளையாட்டுப் பயிற்சி, இந்த விளையாட்டுப் பயிற்சின்னு விரட்டிக்கிட்டே இருக்காங்க. ரசிச்சு கற்றுக்கொள்ள வேண்டிய தனித்திறன் வகுப்புகள்கூட, பரபரன்னு கத்துக்குற நிலைமைதான் இருக்கு. ஒரு பையனின் உண்மையான ஆர்வம் எதுல இருக்குன்னு தெரியாமல், இதுமாதிரி வகுப்புகளுக்கு அனுப்புவதும் நடக்குது. இதனால விளையாட்டு மாதிரி தனித்திறன் வகுப்புலயும் கவனம் செலுத்த முடியாமல், பாடத்திலும் கவனம் செலுத்தமுடியாத நிலைமைதான் ஏற்படுது.

சத்யசந்தன்:

ஏன் எல்லாத்தையுமே நெகட்டிவா பாக்குறீங்க? ஒரு பையன் பேஸ்கட் பால் வகுப்புக்கு போறான்னு வையுங்க. ஆரம்பத்துல கொஞ்சம் ஆர்வமில்லாமல் இருக்கலாம். ஆனால் போகப்போக ரசிச்சு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. இதனால பெரியவனாக வளரும்போது, பாடத்தில் மதிப்பெண் குறைஞ்சாலும், விளையாட்டினால் மேற்படிப்பு, வேலைன்னு வாய்ப்புகள் கிடைக்கும்ல. அதையும் பார்க்கணும்.

பாலசூர்யா:

பேஸ்கட் பால் பத்தி சொன்னாங்க. ஆர்வமே இல்லாமல் ஒருத்தனை அந்த வகுப்புல போட்டு என்ன பயன்? அவனுக்கு ஆர்வமான துறையில சேர்க்கலாம். அப்புறம் புரிஞ்சு படிக்கிறதுங்கிறது பள்ளியிலேயேகூட செய்ய முடியும். இதையே வீட்டுலேயே படிக்க முடியும். இதுக்குன்னு தனிவகுப்பு என்பது அதிகப்படிதான்.

முகேஷ்:

வீட்டுல உட்கார்ந்து படிக்கலாம்னு பார்த்தா... எல்லோர் வீட்டுலையும் அப்படி சூழல் அமையுறதில்லை. ஒண்ணு 'டிவி'யைப் போட்டுடுறாங்க. இல்லை, கடைக்குப் போயிட்டு வான்னு எதாச்சும் வேலை கொடுத்துகிட்டே இருக்காங்க. அதனால தனிவகுப்பு என்பது கண்டிப்பாகத் தேவைதான். இல்லைன்னா.. கூடப்படிக்கிற பையன் தனிவகுப்பு போய் நல்ல மதிப்பெண் எடுக்கும்போது, நான் மட்டும் மதிப்பெண் குறைவா எடுத்தா… எனக்கு அசிங்கமாக இருக்காதா? வீட்டுலயும் என்ன சொல்லுவாங்க. அவன் நல்லா படிக்கிறான். அவனமாதிரி நீயும் படிக்கணும்னா.. தனிவகுப்பு அவசியம்னு சொல்ல மாட்டாங்களா?

பாலசூர்யா:

இதைத்தான் நாங்களும் சொல்ல வர்றோம். ஒரு மாணவனை இன்னொரு மாணவனோடு ஒப்பிட்டு பேசுவதையும், அதன் காரணமாக ஒருவனுக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதையும் நிறுத்தனும்னுதான் நாங்களும் சொல்றோம். ஒட்டுமொத்தமா தனிவகுப்புகளே தேவையில்லைன்னு நாங்க சொல்ல வரலை. அது மேல் வகுப்புகளுக்கு போதும்னு சொல்றோம். விளையாடவேண்டிய வயசுல, சின்னச்சின்னப் பசங்களை எல்லாம், தனிவகுப்புக்கு அனுப்பாதீங்கன்னுதான் கேட்டுக் கொள்கிறோம்.






      Dinamalar
      Follow us