தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து

மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து

மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து


PUBLISHED ON : பிப் 19, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரிசலாங்கண்ணி

ஆங்கிலப் பெயர்: 'ஃபால்ஸ் டெய்சி' (False Daisy)

தாவரவியல் பெயர்: 'ஈக்லிப்டா புரோஸ்ட்ராட்டா' (Eclipta Prostrata)

வகைகள்: வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி

வேறு பெயர்கள்:

கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடி

கரிசலாங்கண்ணி, 'அஸ்டெராசியே' (Asteraceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த குறுஞ்செடி இனம். மூலிகைச் செடியான இது, தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் ஈரப்பதமுள்ள நிலத்தில் நன்கு வளர்கிறது. வயல் வரப்புகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் இந்தச் செடியைக் காணலாம். செடியாகவும், தரையோடு படர்ந்து கொடியாகவும் வளரும்.

எதிர் அடுக்கில் அமைந்த தடிமனான பச்சை நிற இலைகளை உடையது. வெள்ளை நிறத்தில் பூக்கும். மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் நிறத்தில் பூக்கும். விதைப் பரவல் மூலம் இந்தச் செடி இனப்பெருக்கம் ஆகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தச் செடியின் இலைகள் பழங்காலம் முதலே, இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைக் கீரையாக சமைத்தும் உண்ணலாம்; இரும்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மஞ்சள் காமாலை, ஆஸ்த்மா, சளி, சருமப் பிரச்னை, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றிற்கு இது மருந்தாக உதவுகிறது.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us